ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தாகூருக்கு அபராதம் விதிக்கப்பட காரணம் இதுதான்

0
106
Shardul Thakur fined

நேற்று இரவு டெல்லி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பல சம்பவங்கள் அரங்கேறின. போட்டியின் கடைசி ஓவரில் வீசப்பட்ட பந்து நோ பால் என கேப்டன் ரிஷப் பண்ட் ஷர்துல் தாகூர் மற்றும் துணை பயிற்சியாளர் பிரவீன் அம்ரே ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக துணை பயிற்சியாளர் பிரவீன் அம்ரே திடீரென மைதானத்துக்குள் நுழைந்து கள நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை அதுமட்டுமின்றி நேற்றைய போட்டி கட்டணத்தில் இருந்து 100 சதவீதம் அபராதமாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

- Advertisement -

அதேபோல டெல்லி அணியின் டக் அவுட்டில் கேப்டன் ரிஷப் பண்ட், ரோவ்மென் பொவெல் மற்றும் குல்தீப் யாதவை விளையாட வேண்டாம் என்று கூறி உள்ளே அழைத்தார். மறுபக்கம் ஷர்துல் தாகூர் கடும் கோபத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இவர்கள் இருவரும் கடும் கோபத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக, இவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. ரிஷப் பண்ட்டிற்கு 100% போட்டிக் கட்டணம் அபராதமகவும், ஷர்துல் தாகூருக்கு 50% போட்டிக் கட்டணம் அபராதமாகவும் எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஷர்துல் தாகூருக்கு அபராதம் விதிக்கப்பட்ட காரணம் இதுதான்

நேற்றைய போட்டியில் தாகூர் பேட்டிங் செய்து கொண்டிருக்கையில் ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் சஹால் அவருக்கு எதிராக பந்து வீசினார். அவர் வீசிய பந்து வைட் லைனுக்குள் பிட்ச் ஆகி பின்னர் வைட் லைனுக்கு வெளியே சென்றது. இந்த பந்தை வைடாக நடுவராக அறிவிக்கவில்லை. அப்பொழுது தாகூர் திடீரென கத்தி நடுவரிடம் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். அதேபோல நேற்றைய போட்டியில் அவர் பந்து வீசும் பொழுது கூட சற்று ஆக்ரோஷமாகவே காணப்பட்டார்.

- Advertisement -

அதுமட்டுமின்றி நேற்று போட்டியின் கடைசி நேரத்தில் நோ பால் கொடுக்கப்படாத காரணத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு, ஆக்ரோஷத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காரணத்திற்காகவும் நேற்றைய போட்டி கட்டணத்தில் இருந்து இவருக்கு 50 சதவீதம் அபராதமாக எடுத்துக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.