முதல் ஓவரில் மீட்டர் டேப்பை வைத்து அளந்த முஹம்மத் ஷமி – காரணம் இதுதான்

0
3373
Mohammad Shami with measuring tape

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் 43வது ஆட்டம், மும்பையின் ப்ரோபோர்ன் மைதானத்தில், பாஃப் தலைமை வகிக்கும் பெங்களூர் அணிக்கும், ஹர்திக் பாண்ட்யா தலைமை வகிக்கும் குஜராத் அணிக்குமிடையே, டபுள் ஹெட்டர் நாளின் முதல் ஆட்டமாக, தற்போது நடந்து வருகிறது.

இதுவரையில் குஜராத் ஆடிய எட்டு ஆட்டங்களில் ஏழு ஆட்டங்களில் வென்று, 14 புள்ளிகளோடு, புள்ளி பட்டியலில் முதலிடத்தை வகிக்கிறது. பெங்களூர் அணி ஆடிய ஒன்பது ஆட்டங்களில் ஐந்து ஆட்டங்களில் வென்று, 10 புள்ளிகளோடு, புள்ளி பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் பாஃப், பகல் போட்டி என்பதால் பேட்டிங்கை தேர்வு செய்தார். பெங்களூர் அணியில் பிரதேசாய்க்கு பதிலாக மகிபால் லோம்ரர் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் அபினவ் மனோகருக்குப் பதிலாக சாய் சுதர்சனும், தயாலுக்குப் பதிலாக பிரதிப் சங்வானும் சேர்க்கப்பட்டிருந்தார்கள்.

பெங்களூர் அணிக்காக பேட்டிங்கை துவங்க கேப்டன் பாஃப்பும், முன்னாள் கேப்டன் விராட்கோலியும் வர, முதல் ஓவரை வீச வந்த மொகம்மத் சமி, மீட்டர் டேப்பை அம்பயரிடம் கேட்டு வாங்கி அளக்க ஆரம்பித்தார். இது பல இரசிகர்களுக்குக் குழப்பமாக இருந்தது. ஏன் அப்படி செய்தார் என்றால், எவ்வளவு தூரத்திலிருந்து ஓடிவந்து பந்துவீச வேண்டும் என்பதற்காகத்தான். இதெல்லாம் ஏற்கனவே அளத்து வைக்கப்பட்டிருக்கும். சில வீரர்களால் கால்களால் நடந்து அளப்பார்கள். ஆனால் சமி ஆட்டத்தின் போது இப்படி செய்திருக்கிறார்!