சிஎஸ்கேவுக்கு ஆடுன 2-3 போட்டியால தான் ரகானே டெஸ்ட் டீமுக்கு வந்தாருன்னு நெனச்சா, நீங்க 6 மாசமா கோமால இருந்தீங்கன்னு அர்த்தம் – சரமாரியாக சாடிய ரவி சாஸ்திரி!

0
474

சிஎஸ்கேவிற்கு ஆடிய இரண்டு மூன்று போட்டிகளால் மட்டுமே ரகானே இந்திய அணிக்கு வந்துவிடவில்லை. அதற்கு காரணம் வேறு என்று பேசியுள்ளார் ரவி சாஸ்திரி.

இந்திய வீரர் அஜிங்கிய ரகானே சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார். ஆனால் கடந்த சில வருடங்களாக சரியான ஃபார்மில் இல்லாததால், 2022 ஜனவரி மாதத்திற்கு பிறகு டெஸ்ட் அணியில் இருந்து விலக்கப்பட்டார்.

- Advertisement -

அதன் பிறகு உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வந்த ரகானே, சையது முஸ்தக் அலி தொடரில் 5 போட்டிகளில் 110 ரன்கள் அடித்து எதிர்பார்த்தவாறு செயல்படவில்லை. ஆனால் ரஞ்சிக்கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்பட்டார்.11 இன்னிங்ஸ்கள் விளையாடி கிட்டத்தட்ட 650 ரன்கள் விளாசினார். இதில் ஒரு இரட்டை சதம் மற்றும் இரண்டு சதங்கள் அடங்கும்.

அதைத் தொடர்ந்து ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்ற இவரை சிஎஸ்கே அணி 50 லட்சம் ரூபாய் எனும் ஆரம்ப விலைக்கே எடுத்தது. முதல் இரண்டு ஐபிஎல் லீக் போட்டிகளில் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் ரகானே விற்கு இடம் கிடைக்கவில்லை.

அதன் பிறகு அணியின் முன்னணி வீரர்கள் சிலர் உடல்நிலை காரணமாக வெளியில் அமர்ந்ததால் ராகனேவிற்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைத்தது. முதல் போட்டியிலேயே 27 பந்துகளில் 61 ரன்கள், அடுத்ததாக இரண்டு முறை அதிவேகமான 30, 37 ரன்கள். பின்னர் கொல்கத்தா அணிக்கு எதிராக 29 பந்துகளில் 71 ரன்கள் என ஸ்ட்ரைக் ரேட் 200க்கும் குறையாமல் விளாசினார்.

- Advertisement -

ஒட்டுமொத்தமாக இந்த சீசனில் இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 224 ரன்கள் விலாசி சராசரியாக 52 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ரகானே ஸ்ட்ரைக் ரேட் கிட்டத்தட்ட 190 ஆகும். இப்படி கூடுதல் சிறப்பாக செயல்பட்டு வரும் இவரை பிசிசிஐ நிர்வாகம் கவனித்து ஐபிஎல் போட்டிகள் முடிந்து நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் கொடுத்திருக்கிறது.

இதனால் பலரும் சிஎஸ்கே அணியில் அபாரமாக செயல்பட்டதற்காக ராகனேவை எடுத்துள்ளார்கள் என்று கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து, உரிய காரணம் என்னவென்று தெரிவித்திருக்கிறார் ரவி சாஸ்திரி. அவர் கூறியதாவது:

“ரகானே மிகச் சிறந்த பேட்ஸ்மேன். அவர் இரண்டு மூன்று போட்டிகள் சிஎஸ்கே அணிக்காக நன்றாக விளையாடிவிட்டார் என்பதற்காக பிசிசிஐ அவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் எடுத்து விடவில்லை. அப்படித்தான் எடுத்தார்கள் என்று நீங்கள் நினைத்தால் ஆறு மாதமாக கிரிக்கெட்டை கவனிக்காமல் எங்கேயோ விடுமுறையில் சென்று விட்டீர்கள் என்றே அர்த்தம். ஏனெனில் ரஞ்சிக்கோப்பையில் கிட்டத்தட்ட 600 ரன்கள் குவித்த பிறகு ஐபிஎல் போட்டிகளுக்கு வந்திருக்கிறார். அபாரமான பார்மில் இருக்கும் அவரை பிசிசிஐ எடுத்து இருக்கிறது.” என்றார்.