“உலக கோப்பை தோல்விக்கு இதான் காரணம்.. யார் ஐடியா கொடுத்தது?” – ஹர்பஜன் சிங் விளாசல்!

0
8817
Harbajan

இந்தியாவில் நடைபெற்ற 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்று மற்றும் அரை இறுதி என தொடர்ச்சியாக 10 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று ஆச்சரியப்படுத்தியது.

இந்திய அணியின் மூன்று துறைகளும் மிகச் சிறப்பாக இருந்த காரணத்தினால் உலகக் கோப்பையை வெல்லும் என்று இந்திய ரசிகர்களால் மட்டுமல்லாது இந்தியா தாண்டியும் பெரிய எதிர்பார்ப்பை இந்திய அணி உருவாக்கி இருந்தது.

- Advertisement -

ஏற்பட்டிருந்த எல்லா எதிர்பார்ப்புகளுக்கும் மாறாக இந்திய அணி இறுதிப் போட்டியில் செயல்பட்டு 43 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணியிடம் இரண்டாவது பகுதியில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வி இப்பொழுது வரை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.

இறுதிப் போட்டிக்கு அமைக்கப்பட்ட ஆடுகளம் மிகவும் வறண்டு காணப்பட்டது. மேலும் பந்து நின்று மெதுவாக வந்தது. இது பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமான ஒரு ஆடுகளமாக ஆட்டத்தின் முதல் பகுதியில் இருந்தது.

அதே சமயத்தில் ஆட்டத்தில் இரண்டாவது பகுதியில் பனிப்பொழிவு வந்த பொழுது, வறண்ட ஆடுகளம் மாறி பேட்டிங் செய்ய சாதகமானதாக உருவானது. இந்திய அணி தோல்வி அடைவதற்கு மிக முக்கிய காரணமாக இதுதான் இருந்தது.

- Advertisement -

அதாவது இந்திய அணி பேட்டிங் செய்யும் பொழுது ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருந்தது. பந்து வீச வரும்பொழுது பந்து வீசுவதற்கு கடினமான ஆடுகளமாக இருந்தது. இங்கு டாஸ் மட்டுமே வெற்றியை நிர்ணயிக்கக் கூடியதாக மாறியது. இந்த இடத்தில் பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளத்தை அமைத்திருந்தால், இரு அணிகளுக்குமே ஓரளவுக்கு சமமான போட்டிகள் இருந்திருக்கும்.

தற்பொழுது இதுகுறித்து பேசி உள்ள ஹர்பஜன்சிங் கூறும் பொழுது “இறுதிப் போட்டி நடைபெற்ற ஆடுகளம் மெதுவான ஆடுகளம். இது வழக்கமான ஆடுகளங்களை விட வறண்டு காணப்பட்டது. ஆனால் இறுதிப் போட்டிக்கு 300 ரன்கள் மேல் அடிக்கின்ற ஒரு ஆடுகளம் சரியாக இருக்கும். அப்படியான ஆடுகளம் இந்த ஆடுகளத்தை விட இந்தியாவுக்கு உதவியாக இருந்திருக்கும். இறுதிப் போட்டிக்கு அமைக்கப்பட்ட ஆடுகளத்தால் எதிரணிக்கு சாதகமாக மாறியது.

- Advertisement -

உங்களுடைய பேட்ஸ்மேன் எவ்வளவு சிறந்த பேட்டிங் ஃபார்மில் இருந்தார்கள் என்று தெரியும். அவர்கள் இந்த தொடர் முழுக்க மிகச் சிறப்பாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் பேட்டிங் செய்த விதத்திற்கு பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தை அமைத்திருந்தால், இந்த போட்டியின் முடிவு இப்படியானதாக இருந்திருக்காது!” என்று கூறியிருக்கிறார்!