“எங்க தோல்விக்கு இதான் காரணம்.. இதை டி20 உலக கோப்பைல செய்ய விரும்பல” – ஆப்கன் கேப்டன் வருத்தம்

0
334
Zadran

ஆப்கானிஸ்தான அணி முதல் முறையாக இரு நாடுகளுக்கு இடையே ஆன தொடரில் இந்திய அணிக்கு எதிராக இந்தியாவில் டி20 தொடரில் விளையாடுகிறது.

இந்தத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை வழிநடத்த ரஷீத் கான் முதுகில் செய்து கொண்ட அறுவை சிகிச்சை காரணமாக முடியவில்லை. ஆனாலும் அவர் அணியுடன் தொடர்ந்து பயணித்து வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் இளம் தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் ஜட்ரனை கேப்டனாக கொண்டு ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

இந்த தொடரில் முதலில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்க, இன்று நடைபெற்ற போட்டியிலும் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த தொடரையும் இழந்தது.

டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணியில் குல்பதின் நைப் மட்டுமே அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார்.

- Advertisement -

இதற்கடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் சிவம் துபே மின்னல் வேக அரை சதங்களை அடிக்க, இந்திய அணி 15 ஓவரில் இலக்கை எட்டி எளிதாக வென்று விட்டது.

தோல்விக்குப் பிறகு பேசிய ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் இப்ராகிம் ஜட்ரன் “நாங்கள் கொஞ்சம் ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். இந்த முறை பவர் பிளேவில் நன்றாகத் தொடங்கினோம். ஆனால் அதற்குப் பிறகு சரியாக விளையாடவில்லை. நாங்கள் ஆட்டத்தில் பவர் பிளே அல்லது மிடில் ஓவர், டெத் ஓவர் என ஏதாவது ஒரு பகுதியில் மட்டுமே சரியாக விளையாடுகிறோம்.

மிக அருகில் டி20 உலகக் கோப்பைத் தொடர் இருக்கிறது. அதில் நாங்கள் இப்படியான தவறுகளை செய்ய விரும்பவில்லை. நாங்கள் ஒரு முழு அணியாக எல்லா தவறுகளையும் சரி செய்து விளையாட விரும்புகிறோம்.

குல்பதின் நைப் எங்கள் அணியின் மூத்த வீரர். அவரை நாங்கள் மிகவும் நம்புகிறோம். அவர் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த பொழுது, அவர் அதே வேகத்தில் ஆட்டமிழக்காமல் அப்படியே தொடர்ந்து விளையாட வேண்டும்!” என்று விரும்பினோம் என்று கூறியிருக்கிறார்.