குஜராத் லயன்ஸ் அணி உங்களுக்கு நியாபகம் உள்ளதா ? அந்த அணியின் கடைசி போட்டியில் விளையாடிய வீரர்களின் தற்பொழுதைய நிலைமை

0
217
Gujarat Lions IPL

2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடம் பெறாதது நம் அனைவருக்கும் தெரிந்த கதை. 2016 மற்றும் 2017’இல் அந்த இரண்டு அணிகளுக்கு பதிலாக குஜராத் லயன்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிகள் புதிதாக களம் இறங்கி விளையாடியது.

2016 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணி, லீக் சுற்றில் 9 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் தொடரை முடித்தது. லீக் சுற்றில் அபாரமாக விளையாடிய அந்த அணி பிளே ஆஃப் சுற்றில் சுமாராகவே விளையாடியது. முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வி அடைந்தது. அதேபோல இரண்டாம் குவாலிஃபையர் ஆட்டத்திலும் அந்த அணி ஹைதராபாத் அணியிடம் தோல்வி அடைந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

- Advertisement -

2016ஆம் ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அந்த அணி 2017ஆம் ஆண்டு லீக் தொடரிலேயே வெளியேறியது. அந்த அணி அந்தாண்டு ஹைதராபாத் அணிக்கு எதிராக கடைசி போட்டியில் விளையாடியது. அந்த போட்டியில் குஜராத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வீழ்த்தியது. தற்போது கடைசி போட்டியில் அந்த அணி சார்பாக களமிறங்கி விளையாடிய 11 வீரர்களை பற்றி பார்ப்போம்.

டுவைன் ஸ்மித் மற்றும் இஷான் கிஷன்

அந்த போட்டியில் குஜராத் அணிக்கு ஓபனிங் வீரர்களாக டுவைன் ஸ்மித் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கி விளையாடினர். இரண்டு வீரர்களும் அந்த போட்டியில் அரைசதம் குவித்து அசத்தினர். ஸ்மித் 52 ரன்னும், கிஷன் 64 ரன்னும் குவித்தனர். அந்த போட்டிக்கு பின்னர் டுவைன் ஸ்மித் ஐபிஎல் தொடரில் தற்பொழுது வரை எந்த போட்டியிலும் விளையாடாதது குறிப்பிடத்தக்கது. மற்றொரு பக்கம் இஷான் கிஷன் மும்பை அணியில் விளையாடி வருகிறார்.

சுரேஷ் ரெய்னா தினேஷ் கார்த்திக் மற்றும் ஆரோன் பிஞ்ச்

அந்தப் போட்டியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக சுரேஷ் ரெய்னா, தினேஷ் கார்த்திக் மற்றும் ஆரோன் பிஞ்ச் விளையாடினார்.குஜராத் லயன்ஸ் அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா அந்த போட்டியில் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகினார்.
ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

சுரேஷ் ரெய்னா சென்னை அணியிலும் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணியிலும் தற்போது விளையாடி வருகின்றனர். ஆனால் ஆஸ்திரேலிய அணி வீரர் ஆரோன் பின்ச் நடப்பு தொடருக்கான ஐபிஎல் ஏலத்தில் எந்த அணி சார்பிலும் விலைக்கு வாங்கப்படாதது குறிப்பிடத்தக்கது

ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜேம்ஸ் பால்க்னர்

ஆல்ரவுண்டர் வீரர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜேம்ஸ் பால்க்னர் அப்போட்டியில் விளையாடினார்கள். ஜடேஜா 20 ரன் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.ஜேம்ஸ் பால்க்னர் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போட்டியில் இவர்கள் இருவரும் எந்த ஒரு விக்கெட்டையும் கைப்பற்றவில்லை.

ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தற்பொழுது விளையாடி வருகிறார். ஜேம்ஸ் பால்க்னர் அந்த போட்டிக்கு பின்னர் எந்த ஒரு ஐபிஎல் போட்டியிலும் இடம் பெறவில்லை.

பிரவீன்குமார், பிரதீப் சங்வான், முனாஃப் பட்டேல் மற்றும் அங்கீத் சோனி

அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் ஆக பிரவீன்குமார், பிரதீப் சங்வான், முனாஃப் பட்டேல் மற்றும் அங்கீத் சோனி களமிறங்கி விளையாடினர். இவர்களுள் அந்தப் போட்டியில் பிரவீன்குமார் மட்டும் 2 விக்கெட்டைகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அந்தப் போட்டிக்கு பிறகு அங்கீத் சோனி எந்த ஒரு ஐபிஎல் போட்டியிலும் விளையாடவில்லை.

பிரவீன் குமார் மற்றும் முனாஃப் பட்டேல் ஆகிய இருவரும் ஓய்வு பெற்று விட்டனர்.
பிரதீப் சங்வான் கடந்த ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு நெட் பவுலராக விளையாடியது குறிப்பிடத்தக்கது.