ஆர்.சி.பி அணியின் திட்டம் இதுதான்! – பயிற்சியாளர் வெளியிட்டுள்ள கருத்து!

0
147
RCB

அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நேற்று மிகச் சிறப்பாக பரபரப்பாக சுவாரசியமாகக் கேரள மாநில கொச்சின் நகரில் நடந்து முடிந்திருக்கிறது!

இந்த முறை நடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை வாங்கப்படாத விலைக்கு இரண்டு வீரர்கள் வாங்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டு இருக்கிறது!

ஐபிஎல் தொடரில் இரு பெரும் அணிகளான சென்னை அணி இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் வேதப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் பென் ஸ்டோர் வாங்கி அந்த அணி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது!

அதே சமயத்தில் மற்றொரு அணியான மும்பை தேவைப்பட்ட ஒரு வேகப்பந்து ஆல்ரவுண்டருக்காக ஆஸ்திரேலியா அணியின் இளம் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீனை வாங்கி அந்த அணியின் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி உள்ளது.

இரு பெரு அணிகள் ஏலத்தில் இவ்வாறு செயல்பட்டு இருக்கையில், ஒரு முறை கூட கோப்பையை வெல்லா விட்டாலும் இவர்களுக்கு அடுத்து ரசிகர் பலத்தை வைத்திருக்கிற பெங்களூர் அணி இந்த மினி ஏலத்தில் மிகவும் சைலண்டாகவே இருந்து முடித்திருக்கிறது!

இதுகுறித்து இந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் பேசும்பொழுது ” ஜேசன் பெகரன்ட்டாப் போன்ற ஒரு வீரர் இல்லாத பொழுது அவருக்கு மாற்றான ஒரு சரியான வீரரை எடுப்பதையே எங்கள் நோக்கமாக வைத்திருந்தோம். இதை வைத்து நாங்கள் இங்கிலாந்து அணியின் இடது கை வேகப்பந்துவீச்சாளர் டாப்லியை எடுத்தோம். இவர் இங்கிலாந்து அணிக்காக புதிய பந்திலும் பழைய பந்திலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். இவரது இந்த திறமையை எங்களை ஈர்த்தது ” என்று கூறியுள்ளார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” ஏலத்தில் கிடைக்கக்கூடிய இடது கை வேகப் பந்துவீச்சாளர்கள் குறித்து நாங்கள் சில யோசனைகள் வைத்திருந்தோம். இந்த வருட ஐபிஎல் தொடரின் ஆரம்பப் போட்டிகளில் முதலில் ஹசில்வுட் கிடைக்க மாட்டார். இதை கருத்தில் கொண்டே நாங்கள் ஏலத்தில் வீரரை தேடினோம். இந்த வகையில் எங்களுக்கு டாப்லி மிகப் பொருத்தமாக இருந்தார். இவரைப் போன்ற ஒரு உயர்தரமான வீரர் எங்கள் அணிக்கு கிடைத்ததில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி!” என்று கூறியுள்ளார்!