அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பளிக்காத காரணம் இதுதான் – உண்மையை ஒப்புக் கொண்ட ஷேன் பாண்ட்

0
181

நடந்து முடிந்த 2022ஆம் ஆண்டு டாடா ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 10 போட்டிகளில் தோல்வியடைந்து வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி லீக் தொடரில் முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

மும்பை இந்தியன்ஸ் அணி நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடி இருந்தாலும் அந்த அணியில் புதுமுக வீரர்கள் திலக் வர்மா, டிவால்ட் பிரேவிஸ் டிம் டேவிட், ரமன்தீப் சிங் என ஒருசில வீரர்கள் அந்த அணிக்கு நம்பிக்கை அளித்திருக்கின்றனர். இனி வரும் ஐபிஎல் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி சற்று சிறப்பாக விளையாடும் என்று நாம் எதிர்பார்க்கலாம். இப்பொழுது ரசிகர்கள் அனைவரின் மத்தியிலும் இருக்கும் ஒரு கேள்வி மற்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்த வேலையில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை என்பதுதான்.

- Advertisement -

இந்த ஒரு காரணத்திற்காக தான் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை

அர்ஜுன் டெண்டுல்கர் குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஷேன் பாண்ட் ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். “டொமஸ்டிக் லெவல் ஆட்டங்களில் மும்பை அணிக்கு 2 போட்டிகளில் மட்டுமே அர்ஜுன் டெண்டுல்கர் விளையாடி இருக்கிறார்.
அவருடைய பந்துவீச்சு அற்புதமாக இருந்தாலும் பேட்டிங் மற்றும் பீல்டிங் என இரண்டிலும் அவர் இன்னும் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

மும்பை இந்தியன்ஸ் போன்ற ஒரு அணிக்கு விளையாடும் அவர் ஏனோ தானோ என்று விளையாடக்கூடாது. அவருக்கான வாய்ப்பை அவர் பெற வேண்டும். இன்னும் ஒரு சில ஏரியாக்களில் அவர் தன்னை பலப்படுத்த வேண்டும். இவை அனைத்தும் நடக்கும் பட்சத்தில் நிச்சயமாக இனிவரும் தொடர்களில் அவருக்கான வாய்ப்பு வழங்கப்படும்”, என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

சோதனைகள் நிறைந்த மற்றும் கடினமான பாதையில் நாம் பயணிக்க நேரிடும்

அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை என்பது குறித்து சச்சின் டெண்டுல்கர் இடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சச்சின் டெண்டுல்கர், “ஐபிஎல் தொடர் முடிந்து விட்டது. அணி நிர்வாகம் என்ன முடிவு எடுக்கிறது அந்த முடிவு நன்றாகத்தான் இருக்கும் அதில் நான் எப்பொழுதும் தலையிட மாட்டேன்.

அர்ஜுன் டெண்டுல்கர் இடம் நான் பேசியிருக்கிறேன். நான் எப்பொழுதும் அவரிடம் கூறும் ஒரு விஷயம் கிரிக்கெட்டை நாம் நேசித்து விட்டால் கடைசிவரை அதற்காக நாம் கடினமாக உழைக்க வேண்டும். நம்முடைய பாதையில் நிறைய சோதனைகள் வரலாம். நாம் செல்லும் பாதை கடினமாகி கொண்டே போகலாம். இருப்பினும் நம்முடைய முழு ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும் ஒருபொழுதும் கைவிடக் கூடாது. நம்முடைய கடின உழைப்பு இருக்கு ஏற்ற ஊதியம் பின்னாளில் நிச்சயம் வந்து சேரும்”, என்று சச்சின் டெண்டுல்கர் கூறியிருக்கிறார்.