ஜடேஜா – அக்ஸர் பட்டேல் இருவருக்கும் இது ஒன்னு மட்டும் தான் வித்தியாசம் – முன்னாள் இந்திய வீரர் முன்வைத்த புள்ளிவிவரங்கள்!

0
73

அக்சர் பட்டேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவருக்கும் இடையே இந்த ஒரு வித்தியாசம் மட்டுமே இருக்கிறது என்று முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா புள்ளி விவரங்களை முன் வைத்திருக்கிறார்.

இந்திய அணிக்கு சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் எப்போதும் பஞ்சம் இருந்ததே இல்லை. குறிப்பாக 2000ம் ஆண்டுக்கு பிறகு யுவராஜ் சிங் துவங்கி தற்போது அணியில் இருக்கும் அக்சர் பட்டேல், தீபக் ஹூடா வரை சுழல் பந்துவீச்சு ஆல்ரண்டர்கள் உலக தரம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். ரவீந்திர ஜடேஜா அனுபவமிக்க வீரராக இருந்தாலும் தற்போது அவரது இடத்தை நிரப்புவதற்கு மிகவும் துடிப்புடன் அக்சர் பட்டேல் செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

கடந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜடேஜா காயம் காரணமாக வெளியில் இருந்ததால் அக்சர் பட்டேல் உள்ள எடுத்துவரப்பட்டார். அப்போதிருந்து டெஸ்ட் போட்டிகளில் தனது இடத்தை தக்க வைத்துக்கொண்ட அக்சர், லிமிடெட் ஓவர் போட்டிகளிலும் மீண்டும் இந்திய அணிக்குள் வந்திருக்கிறார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர், தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் என தொடர்ச்சியாக இடம்பெற்று பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் முக்கியமான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

டி20 உலக கோப்பையில் இருவரில் யாரை இந்திய அணிக்குள் எடுப்பது என்பது குறித்து தற்போது பிசிசிஐ-க்கு தலைவலி ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் இருவருக்கும் இடையே என்ன வித்தியாசம் இருக்கிறது என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா புள்ளிவிவரங்களுடன் பேசியிருக்கிறார். கடைசியாக 2017 ஆம் ஆண்டு அக்சர் பட்டேல், ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்று விளையாடினார். அதன் பிறகு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின்போது தான் வாய்ப்பு கிடைத்தது. அதில் அபாரமாக செயல்பட்ட அவர், 35 பந்துகளில் 64 ரன்கள் விளாசி இந்திய அணியின் வெற்றியை பெற்றுதந்தார். மேலும் பந்துவீச்சிலும் கிட்டத்தட்ட 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

“அக்சர் கடந்த சில வருடங்களாக தனது பேட்டிங்கை நன்றாக வளர்த்திருக்கிறார். சுழல் பந்துவீச்சில் அக்சர்பட்டேல் சந்தேகமின்றி சிறந்த வீரர். முன்பு பேட்டிங்கில் அவரது பங்களிப்பு சற்று குறைவாக இருந்தது. சமீபகாலமாக பேட்டிங்கில் முன்னேற்றம் கண்டு அசத்தி வருகிறார். ரவீந்திர ஜடேஜா பேட்டிங் பற்றி நான் பேசவே தேவையில்லை. ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் என அனைத்திலும் அபாரமான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். மறுக்க முடியாத வீரரும் கூட. ஜடேஜாவின் புள்ளிவிவரங்கள் பேசும் அவர் எத்தனை விக்கெட்ஸ், எவ்வளவு ரன்கள் எடுத்திருக்கிறார் என.

- Advertisement -

ஆனால் அக்சர் மற்றும் ஜடேஜா இருவருக்கும் இடையே உள்ள ஒரே வித்தியாசம் ஃபீல்டிங் மட்டுமே. அக்சர்பட்டையில் நன்றாக ஃபீல்டிங் செய்யக் கூடியவர். ஆனால் ஜடேஜா விக்கெட்டுகளை உருவாக்கக் கூடியவர். தனது ஃபீல்டிங் மூலம் எந்த நேரத்திலும் பெரிய மாற்றத்தை அணியில் அவரால் கொண்டுவர முடியும். உலகின் தலை சிறந்த ஃபீல்டர்களில் முதன்மையானவராக ஜடேஜா இருப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்திய அணியில் தொடர்ந்து அவருக்கு இடம் கொடுக்கப்பட்டு வருவதும் அந்த ஒரு வித்தியாசத்திற்கு மட்டுமே. டி20 உலக கோப்பையிலும் ஜடேஜா நிச்சயம் இடம் பெறுவார் என்று நம்புகிறேன். அக்சர், போட்டியில் விளையாடும் 11 வீரர்களில் இல்லை என்றாலும் வெளியில் அமர்த்தப்பட்டு இருக்கும் வீரர்களில் இருக்க வேண்டும். அதுதான் அணியின் பலத்தை அதிகரிக்கும்.” என்று கருத்து தெரிவித்தார்.