நியூசிலாந்த அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்டு தொடரில் ஆட உள்ளது . இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் பாகிஸ்தானின் கராச்சி நகரில் இன்று துவங்கியது .

டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது . பாகிஸ்தான் கிரிக்கெட்டின் சேர்மன் ரமீஸ் ராஜா பதவி விலகி புதிய சேர்மன் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து இன்று அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சில காலமாக பாகிஸ்தான் அணியின் ஆட்டோமேட்டிக் விக்கெட் கீப்பர் தேர்வாக இருந்த முகமது ரிஸ்வான் நீக்கப்பட்ட அவருக்கு பதிலாக ஷ்ரபிராஸ் அஹமத் சேர்க்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

பந்துவீச்சிலும் அனுபவ வீரரான ஹசன் அலி அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளார் . இந்நிலையில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது . ஒரு கட்டத்தில் 110 ரண்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்துக் கொண்டிருந்தபோது அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முன்னாள் கேப்டன் சர்ப்ராஸ் ஆகியோர் இணைந்து அணியை சரிவிலிருந்து இருந்து மீட்டனர் .சிறப்பாக ஆடிய பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 317 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஆடிக் கொண்டிருக்கிறது அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் 161 ரன்கள் உடன் களத்தில் உள்ளார் . சிறப்பாக ஆடிய சர்ப்ராஸ் 86 ரன்களில் ஆட்டம் இழந்தார் .

இந்தப் போட்டியின் துவக்கத்தில் உலக கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரு சம்பவம் நடந்துள்ளது . பாகிஸ்தான் அணியின் முதல் இரண்டு விக்கெட்களும் ஸ்டம்பிங் முறையில் வீழ்த்தப்பட்டன . பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் அப்துல்லா ஷபிக் அஜாஸ் பட்டேல் பந்தவீச்சில் ஸ்டம்பிங் முறையில் ஆட்டம் இழந்தார் அவரைத் தொடர்ந்து சான் மசூதும் பிரேஸ்வெல் பந்து வீச்சில் ஸ்டம்பிங் முறையில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

145 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் வரலாற்றில் ஒரு அணியின் முதல் இரண்டு விக்கெட் கனவும் ஸ்டம்பிங் முறையில் ஆட்டம் இழப்பது இதுவே முதல் முறையாகும் . 1877 ஆம் ஆண்டு முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடந்த காலத்திலிருந்து பாரம்பரியமிக்க டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் இன்று இந்த நிகழ்வானது முதல்முறையாக நடந்திருக்கிறது . இதன் மூலம் இந்த டெஸ்ட் போட்டியானது வரலாற்று சிறப்பு பெறுகிறது

- Advertisement -