விராட் கோலி கிடையாது ” நான் பார்த்ததில் சிறந்த பேட்டிங் இது தான் ” – 2 இந்திய வீரர்களை புகழ்ந்து தள்ளிய ஏபி டிவில்லியர்ஸ்

0
405
Ab de Villiers

இந்தியா இங்கிலாந்து இடையே கடந்த வருடம் கோவிட்டால் தவறவிடப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டி தற்போது பர்மிங்ஹாம் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கோவிட் தொற்றால் பாதிக்கப்பட ஜஸ்ப்ரீட் பும்ரா கேப்டனாக இந்திய அணியை வழிநடத்துகிறார்!

இந்தப் போட்டியில் முதலில் டாஸில் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி துவக்க வீரர்களாகச் சுப்மன் கில்லும், செதேஷ்வர் புஜாராவும் களமிறங்கினார்கள்.

- Advertisement -

போட்டி துவங்குவதற்கு முன் வானம் மேகமூட்டமாகவும், ஆடுகளம் ஈரப்பதமாகவும் இருக்க, ஆரம்பத்தில் சில பவுண்டரிகளை இந்திய பேட்ஸ்மேன்களால் அடிக்க முடிந்தாலும், பின்பு இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் கையே ஆட்டத்தில் ஓங்கியது.

இங்கிலாந்தின் பந்து ஸ்விங் ஆகும் சூழலில் ஸ்விங் கிங் என்று அழைக்கப்படும் ஜேம்ஸ் ஆன்டர்சனை விளையாடுவது கடினமான ஒன்று. அது இந்தப் போட்டியிலும் நிரூபணம் ஆனது. அவர் சுப்மன் கில், செதேஷ்வர் புஜாரா, ஸ்ரேயாஷ் ஐயர் என மூன்று இந்திய பேட்ஸ்மேன்களை பெவிலியன் அனுப்பினார். தற்போது இங்கிலாந்து அணிக்குள் நுழைந்திருக்கும் இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளரான மேத்யூ போட்ஸ் விராட் கோலியையும், ஹனுமா விகாரியையும் வெளியேற்றினார். இதனால் 98 ரன்களுக்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் சிக்கியது.

இந்த நிலையில் ஜோடி சேர்ந்த ரிஷாப் பண்ட் மற்றும் ஜடேஜா இருவரும் மிகச்சிறப்பான புத்திசாலித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒரு முனையில் ஜடேஜா நங்கூரமிட்டு நின்று ஒரு ரன்கள் எடுத்து ஆட, மறுமுனையில் நின்ற ரிஷாப் பண்ட் பவுண்டரி, சிக்ஸர்களால் அதிரடியில் மிரட்டினார். மிகச்சிறப்பாக விளையாடிய அவர் 89 பந்துகளில் சதமடித்தார். இறுதியாக 111 பந்துகளில் 146 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி அதிரடியாய் 222 ரன்கள் குவிக்க, இந்திய அணி 416 ரன்களை குவித்தது!

- Advertisement -

தற்போது இவர்கள் இருவரும் விளையாடிய மிகச்சிறப்பான ஆட்டத்தை உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் ஏ.பி.டிவிலியர்ஸ் புகழ்ந்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் “வீட்டிற்குச் செல்லாததால் நிறைய கிரிக்கெட் போட்டிகளைத் தவறவிட்டு விட்டேன். இப்போதுதான் ரிஷாப்-ஜடேஜா விளையாடியதை ஹைலைட்ஸில் பார்த்தேன். அவர்களின் இந்த எதிர்தாக்குதல் ஆட்டம், டெஸ்ட் ஆட்டங்களில் நான் இதுவரை கண்டிராத சிறந்த விளையாட்டு இது” என்று புகழ்ந்து கூறியிருக்கிறார்!