“இதுதான் உண்மையான டெஸ்ட் கிரிக்கெட் சும்மா ஆடுகளத்தையே குறை கூறிக்கொண்டு இருக்காதீர்கள் ” – விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்!

0
398

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடர் முடிவ நெருங்கிக் கொண்டிருக்கிறது. மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2 போட்டிகளையும் ஆஸ்திரேலியா அணி ஒரு போட்டியையும் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் இந்திய அணி முன்னிலை பெற்று இருக்கிறது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியில் தொடக்கத்திலிருந்து ஆடுகளத்தின் தன்மை பற்றி பல்வேறு விதமான சர்ச்சைகளும் கருத்துக்களும் பரவி வருகின்றன. ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கு முன்பும் எந்த வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதை பற்றி ஆலோசிக்கு முன்னரே ஆடுகளத்தின் தன்மை எவ்வாறு இருக்கிறது என ஆராயத் தொடங்கி விடுகின்றனர் கிரிக்கெட் விமர்சகர்களும் பத்திரிகையாளர்களும் . இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னால் வேகப்பந்துவீச்சாளர் இந்திய அணியின் ஆடுகளங்களுக்கு ஆதரவாக பேசியிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

- Advertisement -

2004 ஆம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய ஆஸ்திரேலியா இந்தியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்று பார்டருக்கு பாஸ்கர் கோப்பையை கைப்பற்றியது. அந்தத் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடியவர் மைக்கேல் காஸ்ப்ரோவிச். இவர் 1998 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்த ஆஸ்திரேலியா அணியிலும் இடம் பெற்றிருந்தார். இவர் இந்திய ஆடுகளங்களை பற்றிய தனது பார்வையை செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து தனது பேட்டியில் தெரிவித்து இருக்கும் காஸ்ப்ரோவிச்” இந்திய ஆடுகளங்களைப் பற்றி நடைபெறும் மிகைப்படுத்தப்பட்ட கருத்துக்களையும் விவாதங்களையும் நான் நம்பவில்லை. பொதுவாகவே இந்திய விக்கெட்டுகள் அப்படித்தான் இருக்கும் என்று எனக்குத் தெரியும். இந்தூர் ஆடுகளத்தில் போட்டி விரைவாகவே ஆரம்பிக்கப்பட்டதால் ஆடுகளத்தில் உள்ள ஈரப்பதத்தின் காரணமாக வந்து சில மாயாஜாலங்களை செய்ததாக நான் நினைக்கிறேன்.
ஆனால் ஆட்டத்தின் பிற்பகுதிகளில் அவ்வாறு எதையும் செய்யவில்லை எனக் கூறினார்.

மேலும் இதைப் பற்றி தொடர்ந்து பேசிய அவர் ” இந்த மிகைப்படுத்தப்பட்ட கருத்துக்களை நான் ஏன் நம்ப வேண்டும். ஆடுகளத்தில் ஒரு சில பந்துகள் ஸ்கொயர் ஆக திரும்பியது உண்மைதான். அதற்காக அந்த ஆடுகளம் மோசமான தரம் மதிப்பீட்டைப் பெற்றிருக்கிறது. இதற்கு இப்படி என்றால் நாங்கள் 1998 ஆம் ஆண்டு பெங்களூர் மைதானத்தில் ஆடிய போது அந்த ஆடுகளம் ஒரு சிற்றோடை போலிருந்தது. மேலும் அதில் சில விரிசல்களும் இருந்தன . அந்த மாதிரியான ஆடுகலங்களில் தான் நாங்கள் மூன்றாவது டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்றோம் எனக் கூறினார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து பேசிய அவர் ” நீங்கள் ஆடக்கூடிய அதே ஆடுகளத்தில் தான் அவர்களும் ஆடப் போகிறார்கள். நீங்கள் நன்றாக ஆடுங்கள் இதில் யூகிக்க வேற என்ன இருக்கிறது ?. நாம் ஆடுகளத்திற்கு தக்கவாறு நம்மை மாற்றியமைத்து சரி செய்ய வேண்டும். அதுதான் உண்மையான டெஸ்ட் கிரிக்கெட் என்று கூறி முடித்தார் காஸ்ப்ரோவிச்.