தோனிக்கு கிரிக்கெட்டில் இது கடைசி ஆண்டு கிடையாது; காரணம் இதுதான் – அடித்துச் சொல்லும் பிரட் லீ!

0
2471
Dhoni

நேற்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டிகள் மூலம் ஐபிஎல் 16வது சீசனில் ஒருபாதி போட்டிகள் நடைபெற்று முடிவடைந்து இருக்கின்றன!

இந்த 16 வது ஐபிஎல் சீசனில் மிக முக்கிய நிகழ்வாக, எதிர்பார்ப்பாக சென்னை அணியின் கேப்டன் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்த வருடத்தோடு ஐபிஎல் தொடரை விட்டு ஓய்வு பெறுவாரா என்பது இருக்கிறது.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போது மட்டும் அல்லாமல், வெளி மைதானங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் பொழுதும், மகேந்திர சிங் தோனியை மரியாதையாக வழி அனுப்பும் விதமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெர்சியை அணிந்து மைதானத்தில் குவிந்து கொண்டிருக்கிறார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ஏழாவது போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக மோதிய போட்டியில் மைதானத்தில் முக்கால்வாசி ரசிகர்கள் மஞ்சள் நிற ஜெர்சியுடன் வந்திருந்தார்கள். மகேந்திர சிங் தோனியே இவர்கள் தனக்கு பேர்வல் தர வந்திருக்கிறார்கள் அடுத்த முறை கேகேஆர் ஜெர்சியில் வருவார்கள் என்று சொல்லி இருந்தார்.

மகேந்திர சிங் தோனி குறித்தும் மகேந்திர சிங் தோனியின் ஓய்வு குறித்தும் பேசி உள்ள ப்ரட் லீ ” நீங்கள் இப்பொழுது மஞ்சள் சட்டை அணிந்து இருக்கிறீர்களா? மகேந்திர சிங் தோனி எந்த இடத்தில் பேட் செய்தாலும் சரி, அவருக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். கிரிக்கெட்டுக்கு இது மிகவும் சிறப்பானது என்று நான் நினைக்கிறேன்.

- Advertisement -

கொல்கத்தா மைதானத்தில் பாதி பேர் மஞ்சள் நிற ஜெர்சி உடன் வந்திருந்தார்கள். இது மகேந்திர சிங் தோனி போன்ற ஒருவருக்கு அன்பையும் ஆதரவையும் காட்டுவதாக இருப்பதால் இதை நான் ஆரோக்கியமான ஒன்றாகப் பார்க்கிறேன். அவர் விளையாடும் விதம் என்னை மிகவும் கவர்கிறது.

மகேந்திர சிங் தோனிக்கு இது கடைசி ஆண்டாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் விளையாட்டின் அடையாள வீரர்களாக இருக்கும் இவர்கள் ஓய்வு பெறுவதை ஒருபோதும் நீங்கள் விரும்ப மாட்டீர்கள். ஆனால் இப்பொழுது இம்பேக்ட் பிளேயர் ரூல் வந்திருப்பதால், அவர் இன்னும் ஒன்று இரண்டு வருடங்கள் விளையாடலாம் என்று நான் நம்புகிறேன். இது விளையாட்டிற்கு சிறந்தது!” என்று கூறியிருக்கிறார்!