“2வது சூப்பர் ஓவரில் என்னுடைய திட்டம் இதுதான்.. நான் பந்துவீச வந்த காரணம் வேறு” – ரவி பிஸ்னாய் பேட்டி

0
682
Ravi

இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது இரண்டு சூப்பர் ஓவர்களை சந்தித்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா 121, ரிங்கு சிங் 69 ரன்கள் எடுக்க இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் குர்பாஸ், கேப்டன் இப்ராகிம் ஜட்ரன் மற்றும் குல்பதின் நைப் மூவரும் அதிரடி அரை சதங்கள் அடிக்க, போட்டி டை ஆனது.

முதல் சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தான அணி 16 ரன்கள் எடுக்க, கடைசிப் பந்தில் இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய அணியும் 16 ரன்கள் எடுத்தது. மீண்டும் ஆட்டம் டை ஆனது.

இப்பொழுது இரண்டாவது சூப்பர் ஓவரில் முதலாவது பேட்டிங் செய்த இந்திய அணி இரண்டு விக்கெட் இழந்து 11 ரன்கள் மட்டும் எடுத்தது. பந்துவீச்சுக்கு ஆவேஸ் கான் மற்றும் ரவி பிஸ்னாய் இருவரும் தயாராக இருப்பதாக காட்டப்பட்டது.

- Advertisement -

ஆனால் ரவி பிஸ்னாய் இரண்டாவது சூப்பர் ஓவரை இந்திய அணிக்கு வீசினார். முதல் பந்தில் முகமது நபியை ரிங்கு சிங் மூலம் வெளியேற்றிய அவர், மூன்றாவது பந்தில் குர்பாசை மீண்டும் ரிங் சிங் மூலம் வெளியேற்றி, ஒரு வழியாக இந்திய அணிக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தார்.

இரண்டாவது சூப்பர் ஓவர் பற்றி போட்டிக்கு பின் பேசிய ரவி பிஸ்னாய் “அந்த நேரத்தில் என் இதயம் வேகமாக துடித்தது. ஆனாலும் நாங்கள் ஒரு அணியாக வேடிக்கையாகவே இருந்தோம். சூப்பர் ஓவர் வீச நான் மற்றும் ஆவேஸ் இருவரும் தயாராக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படும்.

அவர்கள் இரண்டு ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேன்களை அனுப்பியதால் அந்த சூப்பர் ஓவர் எனக்குத் தரப்பட்டது. நான் என்னுடைய பந்துவீச்சு திட்டமாக பேக் ஆப் லெந்த் பந்துகளை வீச வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதன்படியே செய்தேன். சூப்பர் ஓவரில் அணியை வெற்றி பெற வைத்தது மகிழ்ச்சியாகவும், நம்பிக்கையை அதிகரிப்பதாகவும் இருக்கிறது. பயிற்சியில் என்னுடைய லெக் ஸ்பின்னில் வேலை செய்தேன்” என்று கூறியிருக்கிறார்.