“நேத்து எடுத்த விக்கெட்ல இதுதான் எனக்கு ரொம்ப பிடிச்ச விக்கெட்!” – முகமது சிராஜின் சூப்பர் செலக்சன்!

0
1257
Siraj

இந்திய அணி நேற்று ஆசியக்கோப்பை இறுதி போட்டியில் அபாரமான முறையில் இலங்கை அணியை வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

மிகக் குறிப்பாக இந்திய அணியின் வலது கை வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் பந்துவீச்சு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று காயம் அடைந்த அக்சர் படேலுக்கு பதிலாக, ஒரே நாள் இடைவெளியில் வலதுகை சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் கொண்டுவரப்பட்டு இந்திய அணி பெரிய தயாரிப்பில் இருந்தது.

இந்த அளவிற்கு ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகம் என்று கணிக்கப்பட்டு இருந்தது. மேலும் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது சுற்றில், மொத்த பத்து விக்கெட்டுகளையும் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு இந்திய அணி கொடுத்திருந்தது.

இந்த நிலையில் முகமது சிராஜ் வேகப்பந்து வீச்சில் செயல்பட்ட விதம், யாருமே எதிர்பார்க்காத ஒன்று. அவர் தான் வீசிய முதல் 16 பந்துகளில் ஐந்து விக்கட்டுகள் கைப்பற்றி உலகச் சாதனை செய்திருந்தார். நேற்று அவர் ஏழு ஓவர்களுக்கு 21 ரன்கள், 6 விக்கெட்டுகள் என அசத்தியிருந்தார்.

- Advertisement -

இந்த செயல்பாடு குறித்து பேசி உள்ள முகமது சிராஜ் “நான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கிரீசுக்கு வெளியில் இருந்து அவுட் ஸ்விங்கர் வீசுவதற்கு கடுமையாக உழைத்திருந்தேன். அதை நன்றாகவும் செய்தேன். மேலும் அதே இடத்தில் இருந்து இன் ஸ்விங் பந்தையும் உள்ளே தள்ள முயற்சி செய்தேன். எனக்கு நேற்று சனகாவின் விக்கெட் மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தது. இறுதிப் போட்டியில் மிகச் சிறப்பாக செயல்படுவது எனக்கு பெரிய ஒரு விஷயம். இதன் மூலம் உலகக்கோப்பைக்கு நம்பிக்கையோடு செல்வேன்.

உண்மையை சொல்வது என்றால் இன்றைய ஸ்பெஷல் ஒரு மேஜிக் போல இருந்தது. ஏனென்றால் நான் அதைப் பற்றி எல்லாம் அதிகம் யோசிக்கவில்லை. கடந்த முறை திருவனந்தபுரத்தில் இலங்கைக்கு எதிராக நான் ஆரம்பத்தில் நான்கு விக்கெட்டுகள் எடுத்திருந்தேன். அதற்குப் பிறகு ஆறு ஓவர்கள் வீசியும் எனக்கு ஐந்தாவது விக்கெட் கிடைக்கவில்லை.

நான் இங்கு விளையாடிய 2 போட்டிகளிலும் எனது பந்துவீச்சு நன்றாகவே இருந்தது. என்னால் பேட்ஸ்மேன்களை தோற்கடிக்க முடிந்தது. இன்று நான் அந்த விளிம்பை தொட்டேன். நான் என்னுடைய பந்துவீச்சில் பந்தை ரிலீஸ் மட்டுமே செய்தேன். போதுமான ஸ்விங் இருந்தது. விக்கெட்டில் பந்தை அடிக்க வேண்டிய தேவையில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பந்தைத் தொடர்ந்து வீச வேண்டும்!” என்று உணர்ந்தேன் என்று கூறி இருக்கிறார்!