இந்த ஐபிஎல்-ல எனக்கு புடிச்ச பேட்ஸ்மேன் இவர்தான் ; ஆனா அது விராட் கோலி சுப்மன் கில் கிடையாது – ஏபிடி ஆச்சரியமான தேர்வு!

0
1298
Devilliers

நடப்பு 16-வது சீசன் ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி மட்டுமே இன்னும் எஞ்சி இருக்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட இறுதிப்போட்டி இன்று நடைபெற இருக்கிறது!

கடந்த வருட ஐபிஎல் தொடரில் அர்ஸ்தீப் சிங், மோஷன் கான், யாஸ் தயால் போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் மிகவும் கவனம் ஈர்த்தவர்களாக இருந்தனர்.

- Advertisement -

இந்த வருட ஐபிஎல் தொடரில் ஜெய்ஸ்வால், திலக் வர்மா, நெகில் வதேரா போன்ற இளம் இந்திய பேட்ஸ்மேன்கள் கவனம் ஈர்த்தவர்களாக இருக்கிறார்கள்.

அதே சமயத்தில் குஜராத் அணிக்குத் துவக்க ஆட்டக்காரராக விளையாடி வரும் சுப்மன் கில் இந்த வருட ஐபிஎல் தொடரில் 800 ரன்களுக்கு மேல் குவித்து அதிக ரன் அடித்தவர் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். மேலும் மூன்று சதங்கள் அடித்து இருக்கிறார்.

இன்னொரு பக்கத்தில் இந்திய அணியின் மூத்த நட்சத்திர வீரர் விராட் கோலி இரண்டு சதங்களுடன் இந்த வருட ஐபிஎல் தொடரை மிகச் சிறப்பாக முடித்து அனைவரது கவனத்தையும் மீண்டும் ஈர்த்திருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் ஏபிடி இந்த வருட ஐபிஎல் தொடரில் தனக்குப் பிடித்த பேட்ஸ்மேனாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வாலைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர் 14 போட்டிகளில் 621 ரன்களை 48 ஆவரேஜில், 163 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருக்கிறார். இதில் ஒரு சதம் மற்றும் ஐந்து அரை சதங்கள் அடக்கம்.

இதுபற்றி ஏபி.டிவில்லியர்ஸ் கூறுகையில் ” ஜெய்ஸ்வால் மிக அதிக வித்தியாசத்தில் கண்டிப்பாக இருப்பார். அவர் கிரிக்கெட் புத்தகத்தில் உள்ள அனைத்து விதமான ஷாட்களையும் வைத்திருக்கிறார். அவர் விக்கெட்டில் அமைதியாகவும் மன உறுதியை அழகாகக் கட்டமைத்தும் நிற்கிறார்.

பந்து வீச்சாளர்களை எப்பொழுதும் ஆதிக்கம் செலுத்தும் அவரது மனநிலையை நான் பெரிதும் ரசிக்கிறேன். அவர் மிகவும் கட்டுப்பாடாக இருப்பது தெரிகிறது. சுப்மன் கில் இவரை விட கொஞ்சம் வயதில் பெரியவர். ஜெய்ஸ்வால் இன்னும் நிறைய தூரம் போக வேண்டும். ஆனால் அவரிடம் சிறந்த வீரர் ஆவதற்கான எல்லாத் தகுதிகளும் இருப்பதை நான் பார்க்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!