“ஜெயிக்க இதுமட்டும் மாறி இருக்கனும்.. பெங்களூர்ல இந்தியாவுக்கு தயாரா இருக்கோம்” – நெதர்லாந்து கேப்டன் பேட்டி!

0
1257
Edwards

இன்று இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நடைபெற்ற போட்டி, இரண்டு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டி.

இந்த போட்டியில் நெதர்லாந்து வென்றால் அடுத்த ஆண்டு சாம்பியன் டிராபிக் தகுதி பெற வாய்ப்புகள் மிக அதிகமாகி இருக்கும். இங்கிலாந்து வென்றால் மட்டும்தான் வாய்ப்பு பெற தகுதியல் இருக்கும் என்கின்ற காரணத்தினால் முக்கியத்துவம் அதிகமாக இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 339 ரன்கள் குவித்தது. பென் ஸ்டோக்ஸ் சதம் அடித்தார். பேட்டிங் செய்ய வந்த நெதர்லாந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்து 160 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இன்றைக்கு ஆரம்பத்தில் நெதர்லாந்து பந்துவீச்சு கொஞ்சம் சுமாராக இருந்தாலும், நடுவில் மீண்டு வந்து இங்கிலாந்து அணியின் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். ஆனால் ஸ்டோக்ஸ் மற்றும் வோக்ஸ் பார்ட்னர்ஷிப் நெதர்லாந்துக்கு பின்னடைவாக அமைந்துவிட்டது.

அதேபோல் நெதர்லாந்துக்கு பேட்டிங்கில் நல்ல துவக்கம் இந்த போட்டியிலும் கிடைக்கவில்லை. வழக்கம்போல் அவர்கள் மீண்டும் நடு வரிசையில் கொஞ்சம் சுமாராக விளையாடினார்கள். பிறகு சரிந்தார்கள்.

- Advertisement -

தோல்விக்கு பின் நெதர்லாந்து அணியின் கேப்டன் எட்வர்ட்ஸ் பேசும்பொழுது “இது ஏமாற்றமாக இருக்கிறது. நாங்கள் பந்துவீச்சில் முதலில் சரியாக துவங்கவில்லை. ஆனால் எங்கள் பந்துவீச்சாளர்கள் பின்பு அதை நன்றாக இழுத்து பிடித்தார்கள். ஆனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இறுதியில் ரன்கள் குவித்தார்கள்.

பேட்டிங்கில் பழைய கதையே தொடர்கிறது.இது பேட்டிங் செய்ய நல்ல விக்கெட். நாங்கள் சில விஷயங்களை முயற்சி செய்த போதும் கூட இங்கிலாந்து நன்றாக பேட்டிங் செய்தது.

இலக்கைத் துரத்தும் பொழுது பவர் பிளேவில் கொஞ்சம் ரன்கள் எடுக்க வேண்டும் விக்கெட்டை காக்க வேண்டும். நாங்கள் இது குறித்து கட்டாயம் பேசுவோம். மேலும் சிறப்பாக விளையாட என்ன செய்ய வேண்டும் என்று கண்டுபிடிப்போம். அடுத்து பெங்களூரில் இந்தியாவுக்கு எதிராக சூழ்நிலை மிகச் சிறப்பாக இருக்கும். அந்த போட்டியை எதிர்நோக்கி இருக்கிறோம்!” என்று கூறியிருக்கிறார்!