“வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் எப்படி இருக்கு அப்படிங்கறத்துக்கு இதுதான் சாட்சி!” – நெதர்லாந்து தோல்விக்குப்பின் டேரன் சமி!

0
2522
Sammy

இந்தியாவில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்காகத் தற்பொழுது ஜிம்பாப்வே நாட்டில் தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது!

இதில் நேற்று ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி மிகவும் பரபரப்பாக நடைபெற்று முடிந்தது.

- Advertisement -

இந்தப் போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ப்ரண்டன் கிங், சார்லஸ் இருவரும் அரை சதம் அடித்து நல்ல துவக்கம் தந்தார்கள். நடுவில் வந்த நிக்கோலஸ் பூரன் அதிரடியாக சதம் அடிக்க, 50 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் ஆறு விக்கெட் இழப்புக்கு 374 ரன்கள் குவித்தது.

இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய நெதர்லாந்து அணிக்கு ஆந்திராவில் இருந்து குடிபெயர்ந்து நெதர்லாந்து சென்று விளையாடும் தேஜா அதிரடியாக விளையாடி சதம் அடித்து அசத்தினார். கடைசிக்கட்டத்தில் லோகன் வான் பீக் உள்ளே வந்து அதிரடியாக விளையாடி ஆட்டத்தை வெல்லும் இடத்திற்கு கொண்டு சென்று ஆனால் டையில் முடித்தார்.

இதனால் சூப்பர் ஓவருக்கு சென்ற ஆட்டத்தில், ஜேசன் ஹோல்டர் வீசிய ஓவரில் மீண்டும் லோகன் வான் பீக் அதிரடி காட்டி 30 ரன்கள் குவித்து ஆச்சரியப்படுத்தினார். அவரே அடுத்து பந்து வீசவும் பந்து எட்டு ரன்கள் மட்டுமே தந்து வெஸ்ட் இண்டீஸின் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

இந்தத் தோல்விக்குப் பிறகு பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் டேரன் சமி ” சில சமயம் நீங்கள் மேலே ஏறுவதற்கு நீங்கள் அடிமட்டத்தை அடைந்துதான் ஆகவேண்டும். எங்களுக்கு முன்னால் இருக்கும் சவால்களை நான் புரிந்து கொள்கிறேன். மேலும் ஒரே இரவில் விஷயங்கள் மாறாது என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன். இது நமது கிரிக்கெட் எங்கு உள்ளது என்பதற்கான சிறந்த பிரதிபலிப்பாகும்!” என்று கூறியுள்ளார்!

இந்தத் தோல்விக்கு பிறகு பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப்
“நாங்களே எங்களை வீழ்த்திக் கொண்டோம். 374 ரன்கள் எடுத்து தோற்றதை என்னால் நம்ப முடியவில்லை. நேர்மையாக அந்த ரன் போதும் என்று நினைத்தேன். எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் வேலையைச் செய்து முடிப்பார்கள் என்று நம்பினேன். துரதிஷ்டவசமாக நாங்கள் தோற்றோம். என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக நம் கண் முன்னால் இருக்கிறது. இனி சிறப்பாகச் செயல்பட வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!