“இந்திய அணிக்கு எதிரா எங்களுக்கு இது பெரிய விஷயம்.. லக் இல்லாம தோத்துட்டோம்” – ஆப்கான் கேப்டன் பேச்சு

0
433
Zadran

இரு நாடுகளுக்கு இடையே இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் முதல் முதலில் மோதிக்கொண்ட வெள்ளைப் பந்து தொடர் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் முடிவுக்கு வந்திருக்கிறது.

இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற கடைசி போட்டியில், இரண்டு சூப்பர் ஓவர்கள் வரை சென்று ஆட்டம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணி கடைசி வரையில் விட்டுத்தராமல் மிகக் கடுமையாக போராடியது. முதலில் இந்திய அணி எடுத்த 212 ரன்கள் மீண்டும் எடுத்து ஆட்டத்தை சூப்பர் ஓவருக்கு கொண்டு சென்றது.

அடுத்து முதல் சூப்பர் ஓவரில் 16 ரன்கள் எடுத்து இந்திய அணியும் 16 ரன்களில் நிறுத்தியது. இதற்கு அடுத்து சென்ற இரண்டாவது சூப்பர் ஓவரில், 11 ரன்களில் இந்திய அணியை மடக்கி அசத்தியது.

ஆனால் எளிதாக வெற்றி பெற்று இருக்க வேண்டிய நிலையில், ரவி பிசினாய் வீசிய அற்புதமான டெலிவரிகளில் முகமது நபி மற்றும் குர்பாஸ் இருவரும் விக்கட்டுகளை இழந்த காரணத்தால் ஆப்கானிஸ்தான் அணி இறுதியில் தோற்றது.

- Advertisement -

ஆனாலும் பெரிய அணிக்கு எதிராக தனிப்பட்ட ஒரு டி20 தொடர் கிடைத்திருப்பது அவர்களுக்கு பல அனுபவங்கள் கிடைக்க உதவியாக இருந்திருக்கிறது. மேலும் இந்த தொடரில் இருந்து அவர்களுக்கு சில பாசிட்டிவான அம்சங்கள் கிடைத்திருக்கின்றன. அவர்களுக்கு இது எதிர்காலத்தில் உதவியாக இருக்கும்.

தோல்விக்கு பின் பேசிய ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் இப்ராகிம் ஜட்ரன் ” உண்மையைச் சொல்வது என்றால் ஒட்டுமொத்த ஆட்டத்தில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். அதிர்ஷ்டம் இல்லாததால் சூப்பர் ஓவரில் தோற்றோம். இந்த தொடரில் நாங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய பல பாசிட்டிவான விஷயங்கள் இருக்கிறது. டி20 உலகக் கோப்பையை சந்திப்பதற்கு இது எங்களுக்கு உதவும்.

நடந்து முடிந்த மூன்று ஆட்டங்களிலும் எங்கள் வீரர்கள் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்கள். இதற்கு முன்பு முழு அணியாகச் சேர்ந்து டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக இப்படி ஒரு போட்டியை நாங்கள் விளையாடியது இல்லை. பேட்டிங் பிரிவில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம்” என்று கூறி இருக்கிறார்.