“பைனலில் இந்த இந்திய வீரர்தான் எக்ஸ் பேக்டர்.. இவரை ஆஸி எதுவும் செய்ய முடியாது!” – இங்கிலாந்து ஸ்வான் பரபரப்பான கணிப்பு!

0
1718
Swann

நாளை மதியம் 2 மணிக்கு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் துவங்க இருக்கிறது.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் இந்த இறுதிப் போட்டிக்கு உலகெங்கும் இருந்து கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

- Advertisement -

இந்திய அணி தன்னுடைய 11 பேருக்கும் சரியான ரோலை கொடுத்து தெளிவாக அணியை உருவாக்கி வைத்திருக்கிறது. அவரவர் அவரவர் வேலையை செய்தால் மட்டும் போதும் என்கின்ற நிலை இருக்கிறது.

இப்படியான தெளிவு இந்திய கிரிக்கெட் வீரர்களை களத்தில் மிக அருமையாக செயல்பட வைக்கிறது. பொறுப்பை கையில் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் அதை மட்டும் செய்து அணிக்கு தகுந்த நேரத்தில் தாக்கத்தை உண்டு செய்து வருகிறார்கள்.

இங்கிலாந்து முன்னாள் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் கிரேம் ஸ்வான் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் எக்ஸ் ஃபேக்டர் எந்த வீரராக இருப்பார் என்கின்ற தன்னுடைய கருத்தை முன் வைத்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது ” நான் எப்பொழுதும் எக்ஸ் ஃபேக்டர் வீரரைத்தான் தேடுவேன். இந்திய அணியில் அது ரவீந்திர ஜடேஜாவாகத்தான் இருப்பார். இந்த உலகக் கோப்பையில் அவர் மிகவும் அமைதியான முறையில் இருந்திருக்கிறார். அவருக்கு பெரிதான பேட்டிங் வாய்ப்புகள் வரவில்லை.

நான் எப்பொழுதும் பெரிய வீரர்களை தேடுவேன். இந்த வகையில் அழுத்தம் இருக்கும் வேளையில், தோல்விக்கு அதிகபட்ச வாய்ப்பு இருக்கும் வேளையில், ரவீந்திர ஜடேஜா அந்த நேரங்களில் மிகச்சிறப்பாக செயல்படுகிறார். குறிப்பாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கடைசி இரண்டு பந்துகளுக்கு 10 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார்.

இந்திய அணியில் என்னை நம்பிக்கையாக பார்க்க வைக்கும் ஒரு வீரர் ரவீந்திர ஜடேஜா. எப்படியான சூழ்நிலையாக இருந்தாலுமே அவர் பேட் மற்றும் பந்து என இரண்டிலும் மிக அமைதியாக இருக்கிறார். அவர் எதைப் பற்றியும் கவலைப்படுபவராக தெரியவில்லை. அவரால் எந்த இடத்திலும் ஸ்கோர் செய்து வெற்றி பெற முடியும்.

பிறகு பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜாவை எடுத்துக் கொண்டால், பந்து ஆடுகளத்தில் திரும்புகிறது என்றால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களால் அவரை ஒன்றுமே செய்ய முடியாது.அவர்கள் தொடர்ச்சியாக அவரிடம் தடுமாறி வருகிறார்கள். எனவே ரவீந்திர ஜடேஜா பைனலில் எக்ஸ் பேக்டராக இருப்பார்!” என்று கூறியிருக்கிறார்!