பும்ராவுக்கு இணையான இந்திய வேகப்பந்து வீச்சாளர் இவர் தான் – ஆசீஷ் நெஹ்ரா புகழ்ச்சி

0
496
Ashish Nehra and Jasprit Bumrah

2022 ஐ.பி.எல்-ன் 15-வது சீசன் நாளை மாலை தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னையும் கொல்கத்தாவும் மோதிக்கொள்கின்றன. இந்தத் தொடரில் மீண்டும் அணிகளின் எண்ணிக்கை எட்டிலிருந்து பத்தாக உயர்த்தப்பட்டது. புதிய இரண்டு அணிகளாக லக்னோ ஜெயன்ட்சும், குஜராத் டைட்டன்ஸூம் இடம் பெற்றுள்ளன!

இந்த வருட ஐ.பி.எல்-கான மெகா ஏலத்தில் வீரர்கள் வாங்கப்பட்டதை வைத்து, ஒவ்வொரு அணிகள் பற்றியும் இரசிகர்களும், முன்னாள் வீரர்களும் பல கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இதில் பெரும்பாலானவர்களின் கருத்துக்கள் படியும், வழங்கிய மதிப்பெண்கள் அடிப்படையிலும் கடைசி இடத்தைப் பெற்றிருந்த அணி ஹர்திக் பாண்ட்யா தலைமை தாங்கும், தலைமைப் பயிற்சியாளராய் முன்னாள் இந்திய இடக்கை வேகப்பந்து வீச்சாளரான ஆஷிஷ் நெக்ரா பொறுப்பேற்றிருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிதான்!

குஜராத் டைட்டன்ஸ் அணியைப் பொறுத்தவரை எடுத்துக்கொண்டால் சமி-பெர்குசன் என்று வேகப்பந்து வீச்சும், ரஷீத்கானால் சுழற்பந்து துறையும் கொஞ்சம் பலமாகவே இருக்கிறது.

அடுத்து கில்-வேட் என்று துவக்க இடம் சராசரியாகவும், ஹர்திக்-மில்லர் என்று பினிசிங் பலமாகவும் இருக்கறது.

- Advertisement -

ஆனால் குஜராத் அணியின் பெரிய பலகீனமே மிடில்-ஆர்டர்தான். இந்த முக்கியமான இடத்திற்கு அனுபவ வீரர்கள் ஒருவர் கூட இல்லை. இதில் ஏலத்தில் ஆஷிஷ் நெக்ரா குழு பயங்கரமாய் சொதப்பி விட்டதாய், ஏலம் முடிந்த பிறகு பலதரப்பட்ட இடங்களிலிருந்தும் விமர்சனங்கள் வந்தன.

இந்த நிலையில்தான் குஜராத் அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகம்மது சமி குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

பேக் ஸ்டேஜ் வித் போரியா நிகழ்ச்சியில் நெக்ரா “எங்களிடம் எல்லாக் கலவையும் கொண்ட அணி இருக்கிறது. முக்கியமாக எங்களிடம் சமி போன்ற ஒரு வீரர் இருக்கிறார். அவரை நான் எப்போதும் நம்புவேன். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அவருக்கு நல்ல எண்கள் இல்லையென்று சிலர் கூறலாம். ஆனால் நாம் ஒரு வீரரை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதில்தான் எல்லாம் இருக்கிறது. பும்ராவுக்கு சிறந்த ஜோடி சமி என்றுதான் நான் கூறுவேன். ட்வென்ட்டி ட்வென்ட்டியில் பும்ராவின் எகானமி 7.50, சமியின் எகானமி 8.20 இல்லை 8.50 இருக்கலாம். ஆனால் அவர் ஸ்ட்ரைக் ரேட்டை பார்த்தால் தெரியும் அவர் ஒரு விக்கெட் டேக்கர் என்று. சமி போன்ற திறமை உடைய வீரர் ஒருவர் நம் பக்கத்தில் இருந்தால், அதைவிட சிறந்த ஒன்றை நாம் கேட்க முடியாது” என்று புகழ்ந்து கூறியிருக்கிறார்.

இந்த ஐ.பி.எல் சீசனில் சமி எப்படிச் செயல்படுகிறார் என்பதைப் பொறுத்தே, வரும் செப்டம்பர் ஆஸ்திரேலியாவில் நடக்கும் ட்வென்ட்டி ட்வென்ட்டி உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்குமென்ற பேச்சு இருப்பது குறிப்பிடத்தக்கது!