“இந்த குதிரை உலக கோப்பைக்கு கட்டாயம் இந்திய டீம்ல இருக்கும்” – இந்தியத் தேர்வுக்குழு முன்னாள் தலைவர் உறுதி!

0
1665
ICT

13ஆவது ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு அக்டோபர் ஐந்தாம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் துவங்கி, முழு தொடரும் முதல்முறையாக இந்தியாவிலே நடத்தப்பட்டு நவம்பர் 19ஆம் தேதி முடிவுக்கு வருகிறது!

இந்த ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடருக்கு இந்திய அணி ஆரம்பத்திலிருந்து மிகவும் முன்னெச்சரிக்கையாகவே இருந்து வந்தது. 2019 ஆம் ஆண்டு பேட்டிங் வரிசையில் நான்காம் இடத்திற்கான வீரர் யார் என்பதில் ஒரு பெரிய குழப்பம் ஏற்பட்டது பின்னடைவாக அமைந்திருந்தது.

- Advertisement -

இந்த முறை அப்படி நடக்கக்கூடாது என்று ஸ்ரேயாஸ் ஐயருக்கு அதிகப்படியான வாய்ப்புகள் நம்பர் நான்காம் இடத்தில் கொடுக்கப்பட்டு, அவரை அந்த இடத்திற்காகவே உருவாக்கி இந்திய அணி நிர்வாகம் கொண்டு வந்தது. ஆனால் அவர் எதிர்பாராத விதமாக காயம் அடைந்த காரணத்தினால் பெரிய பின்னடைவு தற்பொழுது உண்டாகி இருக்கிறது.

யுவராஜ் சிங்கின் நான்காவது இடம் மற்றும் மகேந்திர சிங் தோனியின் ஆறாவது இடம் இப்பொழுது வரை இந்திய அணியில் காலியாகவே இருந்து வருகிறது. இந்த இடங்களை சரியான வீரர்களைக் கொண்டு நிரப்பும் பொழுதுதான் இந்திய அணியால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஒரு உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்பது நிதர்சனம்.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள இந்திய கிரிக்கெட் முன்னாள் தேர்வு குழு தலைவர் எம்எஸ்கே.பிரசாத் “சூரியகுமார் உறுதியாக உலகக் கோப்பைக்கு செல்வார் என்பதில் நான் மிக நம்பிக்கையாக இருக்கிறேன். டி20 கிரிக்கெட் வடிவத்தில் யாராவது நம்பர் ஒன் வீரராக முடியும் என்றால், அவர் விளையாடிய டி20 போட்டிகளில் நாம் அவரிடம் பார்த்த திறமை அவருக்கு இருக்கிறது என்றுதான் அர்த்தம். மேலும் ஐபிஎல் தொடரில் அழுத்தமான சூழ்நிலைகளில் அவர் எவ்வாறு வெற்றிகரமாக செயல்படுகிறார் என்றும் நாம் பார்த்திருக்கிறோம்.

- Advertisement -

அவர் இன்னும் இந்திய அணியில் தனது பங்கினை பெறவில்லை என்பது எனக்குத் தெரியும். அவர் தனது பங்கினை பிடித்து அதற்கு ஏற்ற வகையில் விளையாடினால், அவர் மிகப்பெரிய மேட்ச் வின்னராகவும் சிறந்த பினிஷர் ஆகவும் எதிர்காலத்தில் நிச்சயம் வருவார். உலகக் கோப்பை அணிகள் இடம் பெற அவருக்கு திறமை இருக்கிறது. நாம் அவரை ஆதரிக்க வேண்டும்.

இப்பொழுது சூரியகுமார் விஷயத்தில் ரோஹித் மற்றும் டிராவிட் இருவரும் செய்திருப்பது அருமையான வேலை. ஒருவேளை சூரிய குமாருக்கு என்ன மாதிரியான ரோல் என்று அவர்கள் தெளிவாக முன்பே கொடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அது பினிஷர் ரோலாக இருக்கும். அதை சூரியக்குமார் அனுபவித்து செய்வார். இது சூரிய குமாருக்கு மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும். அவர் இந்த திட்டத்திற்கு ஏற்றபடி திட்டமிட்டு தன்னை மாற்றிக் கொள்வார்” என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்!