“நீங்க நினைக்கிற மாதிரி இந்த பையன் விளையாட மாட்டான்.. அவன் ரூட்டே தனி” – இந்தியா முன்னாள் வீரர் பாராட்டு பேச்சு!

0
10365
Jitesh

நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது, தொடர்ச்சியாக 14வது முறையாக உள்நாட்டில் கைப்பற்றப்பட்ட டி20 தொடராகும்.

நேற்றைய போட்டியில் இந்திய அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்தாலும் நடுவில் ஸ்ரேயாஸ் மற்றும் சூரியகுமார் யாதவ் உடனுக்குடன் விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

- Advertisement -

நேற்றைய போட்டியில் இசான் கிஷான் விளையாடாமல் ஜிதேஷ் சர்மா விளையாடினார். எனவே ரிங்கு சிங் முன்கூட்டியே களத்திற்கு வர வேண்டியதாக அமைந்தது.

சீக்கிரத்தில் களத்திற்கு வந்த ரிங்கு சிங் எந்த நிலையிலும் தன்னால் சிறப்பாக விளையாட முடியும் என்று நேற்று காட்டினார். அவருடைய ஆட்டத்தின் இன்னொரு பரிணாமமாக அது இருந்தது. அவர் 29 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார்.

இந்த நிலையில் இவருடன் சேர்ந்த விக்கெட் கீப்பர் ஜிதேஷ் ஷர்மா உடனடியாக கிரிஸ் கிரீன் பந்துவீச்சில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து அதிரடியாக ஆரம்பித்தார். விக்கெட் குறித்த கவலை இல்லாமல் அவரது ஆட்டம் அச்சமற்றதாக இருந்தது. நேற்றைய போட்டியில் அவர் 19 பந்துகளில் 35 ரன்கள் என மிக முக்கியமான ரன்களை எடுத்தார். இந்திய அணியின் வெற்றிக்கு இறுதிக்கட்ட பேட்டிங் முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

ஜிதேஷ் சர்மா குறித்து பேசி உள்ள இந்திய முன்னாள் வீரர் அபிஷேக் நாயக் கூறும் பொழுது “இன்று ஜித்தேஷ் நம்ப முடியாத வகையில் சிறப்பாக இருந்தார். போட்டிக்கு முன்பாகவே அவரது அச்சமற்ற குணத்தை பற்றி நான் பேசிக் கொண்டிருந்தேன். அவர் எப்பொழுதுமே அப்படித்தான்.

நீங்கள் விக்கெட்டுகளை இழந்த சூழ்நிலையில் இருந்தால், கொஞ்சம் நேரம் எடுத்து உங்களை செட் செய்து கொள்ள நினைப்பீர்கள். மக்களும் அப்படித்தான் எதிர்பார்ப்பார்கள். ஆனால் ஜிதேஷ் சர்மா அப்படியானவர் கிடையாது.

நேற்று விக்கெட் இழந்த நிலையில் கிரீஸ் கிரீன் பந்துவீச்சில் நேராக அச்சமில்லாமல் அடிப்பதற்கு சென்றார். இதனால் அவரை அழுத்தத்தின் கீழ் கொண்டு வந்து இந்தியாவின் ஆட்டத்தை நிலை நிறுத்தினார்.

அவருக்கு திறமை இருக்கிறது என்று எங்களுக்கு எப்பொழுதும் தெரியும். ஆனால் அவர் பேட்டிங் செய்யும் மனநிலை என்பது மிகவும் சுவாரசியமான ஒன்றாக இருக்கிறது!” என்று புகழ்ந்து கூறியிருக்கிறார்!