“இந்த சிஎஸ்கே பிளேயரும் மும்பை பிளேயரும்தான் எனக்கு எல்லாமே.. முதல் ஐபிஎல் மேட்ச்ல…” திலக் வர்மா உருக்கமான பேட்டி!

0
317
Tilakvarma

சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு அணிக்கும் பல வீரர்கள் அறிமுகமாகலாம். அவர்கள் அனைவருமே திறமையின் அடிப்படையில் ஒரே அளவில் கூட இருக்கலாம். ஆனால் அதில் யார் மேலே வருகிறார்கள்? என்றால், சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, பொறுப்பை தானாகவே எடுத்துக்கொண்டு, களத்தில் அணிக்காக யார்? போராடுகிறார்களோ, அவர்கள்தான் நிரந்தர வீரர்கள் ஆகவும் பெரிய வீரர்களாகவும் உருவாகிறார்கள்!

இந்த மாதிரியான குணங்களோடு கடந்த வருட தனது அறிமுக ஐபிஎல் சீசனிலேயே அனைவரது கவனத்தையும் கவர்ந்தவராக, அப்போது 19 வயதாகி இருந்த இளம் இடது கை பேட்ஸ்மேன் திலக் வர்மா இருந்தார். அவருக்கு வாய்ப்பு கிடைத்ததும் தன்னை அதிரடியாக வெளிப்படுத்தியதோடு மட்டுமில்லாமல், சிஎஸ்கே அணிக்கு எதிரான கடைசிப் போட்டியில், ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருக்க, மிகப் பொறுப்பாக விளையாடிய அணியை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

இந்த வருடம் அவருடைய பேட்டிங் திறமை இன்னும் மெருகேறி மிகவும் கூர்மையாக இருந்தது. மேலும் அணிக்கு எந்த இடத்தில் இறங்கி விளையாட வேண்டும் என்றாலும், அணி நிர்வாகம் எந்த இடத்திற்கு அனுப்பினாலும், தாக்கத்தை உருவாக்கக் கூடிய அளவிற்கு மிகச் சிறப்பாக விளையாடினார். திறமையோடு புத்திசாலித்தனமும் இவர் பேட்டிங்கில் இருப்பது தான் சிறப்பான ஒன்று.

தற்பொழுது சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு அறிமுகமாகி இருக்கும் இவர் பேசும்பொழுது “எனது உத்வேகம் சுரேஷ் ரெய்னா மற்றும் ரோஹித் சர்மா இருவரும்தான். நான் ரோகித் பாய் உடன் அதிகம் செலவு செய்கிறேன். என்னுடைய முதல் ஐபிஎல் போட்டியில் அவர் என்னிடம் திலக் நீ மூன்று வடிவத்திற்குமான பேட்ஸ்மேன் என்று கூறினார். அது என்னுடைய நம்பிக்கையை அதிகரித்தது. அவருடைய வழிகாட்டுதல் எனக்கு மிகப்பெரிய விஷயம்.

ரோகித் சர்மா எனக்கு மிகப்பெரிய ஆதரவு அமைப்பாக இருந்தார். அவர் எப்போதும் என்னுடன் பேசுவார் விளையாட்டை ரசிக்க சொல்லுவார். என்னை பொருத்தவரை ஐபிஎல்தான் திருப்புமுனை. ஐபிஎல் தொடரில் நான் என்னுடைய செயல் திறனை வெளிப்படுத்திய காரணத்தினால், எனக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. இன்னும் முன்னோக்கிச் செல்வேன்.

- Advertisement -

நான் எனது அண்டர் 19 உலகக்கோப்பை நாட்களில் இருந்து ராகுல் டிராவிட் சாருடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். அவர் எப்பொழுதும் பேட்டிங்கில் அடிப்படை விஷயங்களை பின்பற்றி, களத்தில் நீண்ட நேரம் நிற்க வேண்டும் என்று கூறுவார்.

தற்பொழுது ஹர்திக் பாண்டியா பாயும் என்னிடம் அதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார். நீங்கள் உள்நாட்டு மற்றும் ஐபிஎல் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு உள்ளீர்கள், உங்கள் அடிப்படை விஷயங்களை பின்பற்றி, உங்கள் விளையாட்டை ரசித்து விளையாடுங்கள் என்று என்னிடம் கூறுவார்!” என்று தெரிவித்திருக்கிறார்!