இந்த ஆஸ்திரேலியா ஸ்பின்னரால் இந்திய பேட்ஸ்மேன்களை எதுவும் செய்ய முடியாது – பாகிஸ்தான் லெஜன்ட் கணிப்பு!

0
3315
ICT

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான மிக முக்கியமான தொடர் இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை நாக்பூர் மைதானத்தில் துவங்க இருக்கிறது!

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் பார்டர் கவாஸ்கர் டிராபியில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நாளை முதல் போட்டியில் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன!

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்புகள் ஆஸ்திரேலியா அணி பிரகாசமாக இருந்தாலும் தங்களது நாட்டில் வைத்து தொடர்ந்து இரண்டு முறை டெஸ்ட் தொடரை இந்திய அணி இடம் இழந்து இருப்பதால் இந்த முறை வென்றே ஆக வேண்டிய முனைப்புடன் இருக்கிறது.

அதே சமயத்தில் இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளை வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் அதற்கான தீவிர முயற்சிகளில் இறங்கி இருக்கிறது. இப்படியான காரணங்களால் இந்த தொடர் மிகவும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது!

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் சுழல் தாக்குதல் பற்றி பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா “ஸ்வெப்சன் ஒரு அடிப்படையான சாதாரண லெக் ஸ்பின்னர். அவரால் இந்தியா பேட்ஸ்மேன்களுக்கு எந்த தொந்தரவையும் கொடுக்க முடியாது. ஆனால் அவர் அணியில் இருப்பது ஒரு கூடுதல் சுழற் பந்துவீச்சு விருப்பத்தை தருகிறது. அதேபோல் ஆரம்ப நாட்கள் தாண்டிதான் ஆஸ்திரேலியா சுழற் பந்துவீச்சாளர்களால் ஏதாவது செய்ய முடியும். அவர்களால் ஆரம்ப நாட்களில் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. நாதன் லயன் துணை கண்டத்தில் விளையாடும் பொழுது நான்காவது அல்லது ஐந்தாவது நாளில்தான் விக்கெட்டில் இருந்து ஏதாவது சாதகத்தை பெறுவார். ஆனாலும் அவருடைய புள்ளிவிபரங்கள் அவர் ஒரு அச்சுறுத்தலானவர் என்பதை சொல்கிறது” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” ஆஸ்திரேலியா அணி நிலைமைகளை மிகவும் விரைவாக மதிப்பிடுகிறது. மேலும் சிறப்பான வியூகங்களுடன் வருகிறது. அவர்கள் ஒரு தாக்குதல் அணி மேலும் இரண்டு, மூன்று நல்ல பந்துவீச்சு விருப்பங்களை வைத்திருக்கிறார்கள். கேப்டன் கம்மின்ஸ் ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதில் நிபுணத்துவம் பெற்றவர். அவரால் நீண்ட ஸ்பெல்களை வீச முடியும். மேலும் விக்கட் டூ விக்கெட் சிறப்பாக வீசுவார். அவர் ஒரு தன்னலமற்ற வீரர் மற்றும் சிறந்த கேப்டன். ஸ்டார்க் இடமும் இதே போல் எல்லாம் உள்ளது. அவரும் பந்தை ரிவர்ஸ் செய்வார். இந்தியாவில் ரிவர்ஸ் ஸ்விங் கிடைக்கும் ” என்று கூறியுள்ளார்!