இன்று ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.
தற்போது ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஆப்கானிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்ற காரணத்தினால், இன்று மூன்றாவது போட்டி இறுதிப்போட்டி போல அமைந்தது.
ரஷீத் கான் பந்துவீச்சில் சுருண்ட ஜிம்பாப்வே
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த ஜிம்பாப்வே அணி சொந்த மண்ணில் தடுமாறியது. அந்த அணிக்கு இந்த போட்டியிலும் அதிகபட்சமாக துவக்க ஆட்டக்காரர் பிரையன் பென்னெட் 24 பந்தில் 31 ரன்கள் எடுத்தார். மாதவேரே 22 பந்தில் 21 ரன்கள் எடுத்தார்.
மேலும் இந்த போட்டியிலும் கேப்டன் மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேன் சிக்கந்தர் ராஸா 7 பந்தில் 6 ரன் மட்டும் எடுத்து வெளியேறி ஏமாற்றம் கொடுத்தார். இறுதியில் ஜிம்பாப்வே அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியின் தரப்பில் ரஷீத் கான் 4, நவீன் உல் ஹக், முஜீப் ரஹ்மான் மற்றும் அஸமத்துல்லா ஓமர்சாய் மூவரும் தலா 2 விக்கட்டுகள் கைப்பற்றினார்கள்.
நபி அசத்தல் பினிஷிங்
இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 44 ரன்களுக்கு முக்கிய நான்கு விக்கெட்டுகளை இழந்து விட்டது. இதைத் தொடர்ந்து அசமத்துல்லாஹ் ஓமர்சாய் 37 பந்தில் 34 ரன்கள், குல்பதின் நைப் 22 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
இதையும் படிங்க : இந்த குறை நிச்சயமா ரோஹித் அணியில் இருக்கு.. ஒத்துக்கிட்டே ஆகணும்.. இதான் எதார்த்தம் – ஆகாஷ் சோப்ரா கருத்து
இதற்கு அடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் கையில் மூன்று விக்கெட்டுகள் இருக்க கடைசி ஓவரில் வெற்றிக்கு ஏழு ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் இருந்த அனுபவ வீரர் முகமது நபி 3 பந்துகள் மீதம் வைத்து 18 பந்தில் 24 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வெற்றி பெற வைத்தார். இதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.