பிட்ச் பற்றி பேசாமல் அடுத்த ஐந்து நாள் எப்படி விளையாடுவது அப்படினு யோசிங்க! – ரோகித் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்களுக்கு பதிலடி!

0
528

நாளை இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே துவங்க இருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் போட்டிக்கான நாக்பூர் ஆடுகளப் புகைப்படங்கள் நேற்று வெளியாகியதில் இருந்து கடுமையான விமர்சனங்கள் எதிர்தரப்பில் இருந்து புறப்பட ஆரம்பித்திருக்கிறது!

சீரமைப்பில் மற்றும் பராமரிப்பில் இருக்கும் நாக்பூர் ஆடுகளத்தில் சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தண்ணீர் விட்டும், ரோலர் கொண்டு உருட்டியும் இந்திய சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகவும் ஆஸ்திரேலியா இடது கை பேட்ஸ்மேன்களுக்கு பாதகமாகவும் ஆடுகளம் அமைக்கப்படுவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன!

- Advertisement -

ஆஸ்திரேலியா பத்திரிகைகளும் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்களும் ஒரு படி மேலே போய் இது குறித்து ஐசிசி விசாரிக்க வேண்டும் இந்திய அணி நிர்வாகத்தை தண்டிக்க வேண்டும் என்று கடுமையாகப் பேசி வருகிறார்கள். குறிப்பாக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் பிரபல வேத பந்துவீச்சாளர் ஜேஷன் கில்லஸ்பி இப்படியான கருத்துக்களை முன்வைத்து வருகிறார்!

தற்பொழுது இது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மௌனம் கலைத்து வெளிப்படையான தனது கருத்துக்களை வெளியிட்டு ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்களுக்கு மறைமுகமான பதிலடி தந்திருக்கிறார்!

இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா
” சீரமைப்பு பராமரிப்பில் இருக்கும் ஆடுகளத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்காமல் அடுத்த ஐந்து நாட்கள் எப்படி விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும். ஆடுகளத்தை பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். நாங்கள் இங்கு விளையாடிய கடைசி தொடரில் ஆடுகளம் பற்றி நிறைய பேசப்பட்டது. மொத்தத்தில் விளையாட இருக்கும் 22 பேரும் தரமான வீரர்கள். ஆடுகளம் எப்படி இருக்கும் எப்படி மாறும் எப்படி சீம் ஆகும் கவலைப்பட வேண்டாம்” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” இதையெல்லாம் மறந்து விட்டு விட்டு வெளியே வந்து விளையாடி வெற்றி பெறுவது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். நல்ல கிரிக்கெட்டை விளையாடுங்கள். எளிமையாக இருந்து வெற்றி பெறுவது கடினமான ஒன்று கிடையாது ” என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களுக்கு பதிலடி தரும் விதமாக ரோகித் சர்மா தனது வழக்கமான பாணியில் பதிலடியை தந்திருக்கிறார்!