“2027 உலக கோப்பையில் விராட் கோலி விளையாடுறத இவங்க விரும்ப மாட்டாங்க!” – ரிக்கி பாண்டிங் வித்யாசமான பேச்சு!

0
3884
Virat

இன்றைய நவீன கிரிக்கெட்டின் ராஜாவாக இந்திய அணியின் ரன் மெசின் விராட் கோலி இருந்து வருகிறார். மேலும் கிரிக்கெட்டில் இருந்து உலக அளவில் சிறந்த விளையாட்டு வீரர்களின் முதல் ஐந்து இடங்களில் இருக்கக்கூடியவராகவும் இருக்கிறார்.

விராட் கோலிதான் தற்போதைய காலக்கட்டத்தில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சீராக மற்றும் தாக்கத்தை உண்டாக்கக்கூடிய பேட்ஸ்மேனாக விளங்கி வருகிறார்.

- Advertisement -

அவருடன் ஒப்பிடப்பட்ட ஒப்பிடப்பட்டு கொண்டிருக்கிற எந்த வீரரும் விராட் கோலி போல் மூன்று வடிவத்திலும் சீரான ரன் குவிப்பு மற்றும் தாக்கம் மிகுந்த இன்னிங்ஸ்கள் விளையாடுவது கிடையாது. அதிகபட்சமாக ஏதாவது இரண்டு வடிவத்தில் மட்டுமே சிறப்பாக இருக்கிறார்கள்.

விராட் கோலி தன்னை கிரிக்கெட்டில் படிப்படியாக எல்லா விதத்திலும் தகுதிப்படுத்திக் கொண்டே வந்திருக்கிறார். பேட்டிங் திறமை மட்டும் என்று இல்லாமல், உடல் தகுதியை நிர்வகிப்பதில் அவர் உச்சத்தில் இருக்கிறார். இதன் காரணமாக பல இளம் விளையாட்டு வீரர்களுக்கு அவர் உதாரணமாக திகழ்கிறார்.

இந்த நிலையில் இந்த உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததின் மூலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்திருந்த சச்சின் சாதனையை அவர் சமன் செய்தார்.

- Advertisement -

ஒரு காலக்கட்டத்தில் இந்த சாதனையை யாரும் முறியடிக்க முடியாது என்கின்ற நிலை இருந்தது. ஆனால் சச்சினை விட 175 இன்னிங்ஸ்கள் குறைவாக விளையாடி ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சர்வதேச சதங்கள் விளாசி இருக்கிறார்.

விராட் கோலி குறித்து பேசி உள்ள ஆஸ்திரேலியா லெஜன்ட் ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது “நீங்கள் விராட் கோலியின் உலகக்கோப்பை செயல்பாட்டை எடுத்துக் கொண்டு பார்த்திர்கள் என்றால், அவர் ஒவ்வொரு உலகக்கோப்பையிலும் மிகச் சிறப்பாக மெருகேறிக் கொண்டே வருகிறார்.

உலகத்தின் எந்த கிரிக்கெட் நாட்டு ரசிகரும் 2027 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் விராட் கோலி விளையாடுவதை விரும்ப மாட்டார்கள். அவர் விளையாடினால் நிச்சயம் 600 முதல் 700 ரன்கள் எடுப்பார்.

விராட் கோலி முழுமையாக சிறந்தவர் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. நான் இதை எப்போது இருந்து கூறி வருகிறேன். சச்சினின் சாதனையை அவர் சமன் செய்தது சாதாரணம் கிடையாது. அதுவும் 175 இன்னிங்ஸ்கள் குறைவாக செய்திருக்கிறார். அவர் இதற்காக மிகக் கடுமையாக உழைத்திருக்கிறார்!” என்று கூறியிருக்கிறார்!