“இவங்கதாங்க தோல்விக்கு காரணம்.. தென் ஆப்பிரிக்காவிலும் சரியில்ல.. மழை வேற..!” – ஸ்மித் வித்தியாசமான பேச்சு!

0
26793
Smith

இன்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கிறது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக வந்த ஸ்மித் டாசை வென்றார். இந்திய சூழ்நிலையில் டாஸ் வெல்வது மிக முக்கியமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆனால் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு எதிர்பார்த்த விதமாக அமையவில்லை. மேலும் இந்திய பேட்ஸ்மேன்கள் கில், ஸ்ரேயாஸ், கேஎல் ராகுல் மற்றும் சூரியகுமார் ஆகிய நால்வரும் பேட்டிங்கில் மிரட்டி விட்டார்கள்.

இதற்கடுத்து பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலியா அணிக்கு டேவிட் வார்னர் மற்றும் சீன் அப்பாட் தவிர வேறு யாரும் சரியான பங்களிப்பை செய்யவில்லை. மேலும் கேப்டன் அனைத்து சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆனார்.

இந்திய அணி நான்கு வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரை தற்பொழுது கைப்பற்றி இருக்கிறது. அதே சமயத்தில் ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக தென் ஆப்பிரிக்கா தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஆல் அவுட் ஆகி இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் தோல்விக்கு பிறகு பேசிய ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித்
“நாங்கள் இங்கு வந்து பார்த்தபோது இந்த விக்கெட் மிகவும் நன்றாக இருந்தது போல் தெரிந்தது. ஆனால் மொத்த பாராட்டும் கில் மற்றும் ஸ்ரேயாஸ் இருவருக்கே சேரும். அவர்கள் எங்கள் பக்கத்தில் இருந்து ஆட்டத்தை மொத்தமாக பறித்து விட்டார்கள்.

மேலும் கேஎல்.ராகுல் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் பேட்டிங் செய்த விதமும் அருமையாக இருந்தது. மழை வந்த பிறகு ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக மாறியது.

நாங்கள் தென் ஆப்பிரிக்கா தொடங்கி சில போட்டிகளில் தொடர்ச்சியாக தோற்று வருகிறோம். நாங்கள் சில விஷயங்களை சரி செய்ய வேண்டும். அடுத்த ஆட்டத்தில் அதை மாற்றுவோம். எங்களுக்கு இன்னும் சில நாட்கள் உள்ளன. மேலும் இந்தியா மற்றும் நாங்கள் இரு அணிகளும் உலகக் கோப்பைக்கு தயார்தான் ஆகிக்கொண்டு இருக்கிறோம். கடைசி ஆட்டத்தில் எல்லாவற்றையும் மாற்றுவோம்!” என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்!