“இனி இழக்க எதுவும் இல்ல.. அடித்து நொறுக்க போறோம்!” – பட்லர் இந்தியாவுக்கு தோல்விக்கு பின் எச்சரிக்கை பேச்சு!

0
4289
Buttler

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் பெங்களூரு மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தி இருக்கிறது.

இன்று உலகக்கோப்பை தொடரில் தனது ஐந்தாவது போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணி நான்காவது தோல்வியைப் பெற்று ஏறக்குறைய அரை இறுதி வாய்ப்பிலிருந்து வெளியேறி இருக்கிறது.

- Advertisement -

உலகக்கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி இருக்கும் என்று பல முன்னாள் வீரர்கள் கணித்திருந்தார்கள். ஆனால் தற்போது இங்கிலாந்துக்கு அரையிறுதியிலேயே இடம் இல்லை என்பதாகத்தான் தெரிகிறது.

தோல்விக்கு பின் பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் கூறும்பொழுது “இது நம்ப முடியாத ஏமாற்றம் அளிக்கும் கடினமான தோல்வியாகும். எங்களைப் பற்றி நாங்கள் நல்ல விதத்தில் வெளிப்படுத்த முடியாதது அணியில் இருக்கும் எல்லோருக்கும் பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. இந்த நேரத்தில் எதற்கும் தெளிவான பதில் இல்லை.

எங்கள் அணியின் வீரர்களின் முயற்சியில் எந்த குறையும் தவறும் கிடையாது. ஆனால் நாங்கள் எங்களுடைய சிறந்த செயல்பாட்டில் இருந்து மிகத் தொலைவில் இருக்கிறோம். இது கேப்டனாக இருந்து அணியை வழிநடத்துவதில் இருந்து ஆரம்பிக்கிறது.

- Advertisement -

உண்மையைச் சொல்வது என்றால் அணியில் நிறைய அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் நம்பிக்கையான வீரர்கள். ஒரே இரவில் வீரர்களோ அல்லது ஒரு அணியோ மோசமானதாக மாறிவிட முடியாது. இது மிகப்பெரிய ஏமாற்றத்தால் உருவானது என்று நினைக்கிறேன். நம்பிக்கை இல்லாமல் வந்தது கிடையாது.

அணித் தேர்வு என்பது சீராக இருந்திருக்க வேண்டும். அது வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடியதாக இருந்திருக்க வேண்டும். ஆனாலும் தேர்வு என்பது தற்போது ஒரு பிரச்சனை இல்லை. வீரர்கள் தங்களுடைய செயல் திறனுக்கு ஏற்ற வகையில் செயல்படவில்லை.

நாங்கள் செய்து கொண்டிருக்கும் தவறுகளை எங்களிடமிருந்து வழக்கமாக நீங்கள் பார்க்க முடியாது. நாங்கள் அடிப்படை விஷயங்களில் சரியாகச் செயல்படவில்லை. தற்பொழுது மிகப்பெரிய விஷயம் தனிப்பட்ட பெருமை உணர்வு தான். அடுத்த போட்டிகளில் என்ன நடந்தாலும் சரி முன்னோக்கி சென்று கொண்டே இருக்க வேண்டும்!” என்று கூறியிருக்கிறார். அடுத்து இங்கிலாந்து அணி இந்தியாவுடன் ஞாயிற்றுக்கிழமை லக்னோ மைதானத்தில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது!