இன்னொரு உலக கோப்பை கிடைக்காது.. கோலி ரோஹித் கூட சேர்ந்து இருக்கனும் – கங்குலி ஒளிவு மறைவு இல்லாத பேச்சு!

0
1062
Ganguly

இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து நகர்ந்து கொண்ட பிறகு, புதிய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் புதிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூட்டணியின் கீழ் டி20 மற்றும் டெஸ்ட் என இரு வடிவங்களில் உலகக்கோப்பை தொடர்களை சந்தித்து அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் தோற்று சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது!

தற்பொழுது இந்த முறை இந்தக் கூட்டணிக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இந்தியாவில் நடத்தப்படும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இருக்கிறது. எனவே இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் மீது நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதுவே இந்திய அணிக்கு தனியான அழுத்தத்தையும் உருவாக்கி இருக்கிறது.

- Advertisement -

மேலும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கிறது. எனவே அடுத்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா விளையாடுவதற்கான வாய்ப்பு 99 சதவீதம் கிடையாது. விராட் கோலி விளையாடுவதற்கு வாய்ப்புகள் கொஞ்சம் இருக்கிறது.

தனிப்பட்ட முறையில் கேப்டனாகவும் ரோகித் சர்மாவுக்கு இந்த உலகக் கோப்பைத் தொடர் மிக முக்கியமான ஒன்று. அவர் அதற்கான முக்கியத்துவத்தை தருவார் என்று நம்பலாம். தற்போது உலகக்கோப்பைக்கு ஒத்திகையாக இந்திய அணி ஆசிய கோப்பையில் விளையாடுவதற்கு இலங்கைக்கு சென்று இருக்கிறது. செப்டம்பர் இரண்டாம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் சுற்றில் முதல் போட்டியில் விளையாடுகிறது.

கடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை எடுத்துக் கொண்டால் இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டில் துவக்க வீரராக ரோஹித் சர்மா பிரமாதமாக செயல்பட்டு இருந்தார். ஐந்து சதங்கள் அடித்து 648 ரன்கள் மொத்தமாக குவித்து, கடந்த ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரராக வந்தார். இன்னொரு பக்கத்தில் விராட் கோலியின் மீதான எதிர்பார்ப்பும் இந்த உலகக் கோப்பையில் மிக அதிகமாக இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் கங்குலி கூறும் பொழுது “விராட் கோலி சிறப்பாக விளையாடுகிறார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ரோகித் சர்மா உடன் இணைந்து அவர் இந்திய அணியின் பலமாக முக்கிய வீரராக இருப்பார். ரோகித் சர்மாவின் பேட்டிங் பார்மும் இவருக்கு சமமாக இருக்கும். கடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் 5 சதங்கள் ரோகித் சர்மா அடித்தார். அது நம்ப முடியாத செயல்திறன்.

கேப்டனாக இதுவே அவரது கடைசியான உலகக் கோப்பை. டி20 உலகக் கோப்பைக்கு அடுத்த ஆண்டு அவர் வந்தாலும் வரலாம். ஆனால் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைக்கு அடுத்த நான்கு ஆண்டுகள் உள்ளன. அவ்வளவு தூரம் அவர் விளையாடுவார் என்று நான் நினைக்கவில்லை. எல்லோரும் முக்கியமானவர்களாக இருப்பார்கள். அவர்கள் எல்லோரும் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நான் நம்புகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!