இப்பவே சொல்றேன்.. ஆஸ்திரேலியாவிலும் அதே பிளான்தான்.. இனி இப்படித்தான் டீம் இருக்கும் – சூரியகுமார் யாதவ் பேட்டி

0
65
Surya

தற்போதைய இந்திய டி20 அணியின் திட்டங்களில் எந்தவிதமான பெரிய மாற்றங்களும் இருக்காது என இந்திய டி20 கேப்டன் சூர்யா குமார் யாதவ் தெரிவித்திருக்கிறார்.

இந்திய அணி ஆசியக் கோப்பை தொடரில் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களை மட்டுமே வைத்து விளையாடியது. தற்போது ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில் என்ன செய்வார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

- Advertisement -

ஹர்ஷித் ராணா இல்லையா?

தற்போது இந்திய அணியின் பௌலிங் யூனிட் ஆஸ்திரேலியாவில் ஹர்ஷித் ராணா, பும்ரா, அர்ஸ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி அக்சர் படேல் மற்றும் சிவம் துபே என அமைவது தான் சரியாக இருக்கும். நான்கு வேகப் பந்து வீச்சு விருப்பங்கள் இருக்க வேண்டியது ஆஸ்திரேலியாவில் அவசியமாக இருக்கிறது.

இந்த நிலையில் பெரிதான மாற்றங்கள் எதையும் செய்ய மாட்டோம் என சூரியகுமார் யாதவ் தெரிவித்திருப்பது ஆச்சரியத்தை உருவாக்கி இருக்கிறது. ஆசியக் கோப்பையில் மூன்று சுழல் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடி அது போல விளையாட முடியுமா? என்பது சந்தேகத்தை உருவாக்கி இருக்கிறது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்காவிலும் இப்படித்தான்…

இது குறித்து கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசும் பொழுது ” நான் தற்பொழுது மிகவும் கடினமாக உழைத்து வருவது போல உணர்கிறேன். நான் முன்பும் இதே போல்தான் உழைத்து வந்தேன். நான் அப்பொழுது உழைக்கவில்லை என்று அர்த்தம் கிடையாது. இந்தியாவில் நல்ல பயிற்சி அமர்வுகள் கிடைத்தது. மேலும் தற்போது இங்கு ஆஸ்திரேலியாவில் 3 பயிற்சி அமர்வுகள் கிடைத்திருக்கிறது. தற்போது நான் நல்ல நிலையில் இருக்கிறேன். என்னிடமிருந்து ரன்கள் எப்படியும் வரும். ஆனால் ஒரு குழுவாக இலக்கை நோக்கி முன்னேறுவதுதான் முக்கியம்”

இதையும் படிங்க : 7 போட்டி 127 ரன்.. கில்லை வச்சு சாம்சனுக்கு செய்யறது பெரிய அநியாயம்.. இதுல ஜெய்ஸ்வால் வேற – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

“சூழ்நிலைகளுக்கு ஏற்ப எங்களுடைய காம்பினேஷன் பெரிதாக மாறாது என்று நான் நினைக்கிறேன். தென் ஆப்பிரிக்காவில் நாங்கள் விளையாடிய பொழுது ஒரு வேகப்பந்துவீச்சாளர் ஒரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரை வைத்துக்கொண்டு, மீதி மூன்று சுழல் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடினோம். ஆஸ்திரேலியா கூட தென் ஆப்பிரிக்கா போல பவுன்ஸ் இருக்கும் ஆடுகளங்கள்தான் வைத்திருக்கிறது. எனவே நாங்கள் இதே வழிமுறையில் செல்ல முடியும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -