ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய டி20 துணை கேப்டன் கில்லுக்கு பெரிய அளவில் அழுத்தம் ஏற்பட்டு இருப்பதாக ஆகாஷ் சோப்ரா கூறி இருக்கிறார்.
இதற்கு முன்பாக இந்திய டி20 அணிக்கு துவக்க ஆட்டக்காரராக சஞ்சு சாம்சன் மூன்று சதங்கள் அடித்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் கில்லை உள்ளே கொண்டு வருவதற்காக அவரது இடம் பறிக்கப்பட்டு மிடில் ஆர்டருக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார்.
ஆசியக் கோப்பை சொதப்பல்
ஆசியக் கோப்பை தொடரில் மீண்டும் இந்திய டி20 அணியில் இடம் பிடித்த கில் துணை கேப்டன் ஆகவும் அறிவிக்கப்பட்டார். மேலும் அந்தத் தொடரில் 7 போட்டிகளில் விளையாடி வெறும் 127 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒரு அரை சதம் கூட அவர் எடுக்கவில்லை.
இது குறித்து பேசி உள்ள ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடர் கில்லுக்கு முக்கியமானதாக இருக்கும். ஒருநாள் அணிக்கு அவர் கேப்டனாக கொண்டுவரப்பட்ட தொடரில் அவரால் ரன்கள் எடுக்க முடியாததால் இந்த அழுத்தம் உருவாகி இருக்கிறது. இப்போதைக்கு அவரது இடம் குறித்து எந்த கேள்வியும் இருக்காது”
சாம்சனுக்கு அநீதி
“கில் மிகவும் தடுமாறி வருகிறார் என்பதை மக்கள் உணர்கிறார்கள். அந்த இடத்தில் சிறப்பாக விளையாடுவதற்கு ஏற்கனவே அணியில் ஒருவர் உள்ளே இருக்கிறார். சஞ்சு சாம்சன் அந்த இடத்தில் நன்றாக விளையாடியிருக்கிறார். தற்போது கில்லை வைத்து அவருக்கு பெரிய அநீதி செய்யப்படுவதாக நினைக்கிறேன். அவரை ஓபனிங் அனுப்பாவிட்டால் நிறைய அழுத்தம் உண்டாகும்”
இதையும் படிங்க : நீங்களாம் மனுஷங்களே இல்லை.. ரோகித் விராட்டுக்கு எதிராக கரப்பான் பூச்சி மாதிரி ஏன் வரீங்க? – ஏபி டிவில்லியர்ஸ் கோபம்
“தற்போது ஜெய்ஸ்வால் வெளியில் இருக்கிறார். தனக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் சிறப்பாக விளையாடுவேன் என அவர் கூறுகிறார். மிகச் சிறப்பான வீரரான அவரை வெளியில் உட்கார வைத்திருப்பதும் அழுத்தத்தை அதிகமாகி கொண்டு இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.






