“ஷுப்மன் கில் அணுகு முறையில் தவறு ஏதும் இல்லை”- ஹர்பஜன் சிங் சர்ச்சை விமர்சனம்!

0
93

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 109 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 197 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 88 ரன்கள் முன்னிலை பெற்றது.

இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் தற்போது வரை 140 ரன்களுக்கு ஏழு விக்கெட் களை இழந்து தடுமாறிக் கொண்டிருக்கிறது. புஜாரா ஒரு முனையில் 51 ரன்கள் உடன் களத்தில் இருக்கிறார். அவருடன் அக்சர் பட்டேல் இணைந்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்க போராடி வருகிறார். தற்போது வரை இந்திய அணி 52 ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலியா அணியை விட முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் சுப்மண் கில் இரண்டாவது இன்னிங்ஸின் போது ஆட்டம்இழந்த விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது. பொறுப்பற்ற விதத்தில் ஆட்டமிழந்த தாக முன்னாள் வீரர்கள் பலரும் அவரை குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் சுப்மன் கில்லுக்கு ஆதரவாக தனது கருத்தினை பதிவு செய்து இருக்கிறார்.

இன்றைய போட்டியின் வர்ணனையின் போது பேசிய ஹர்பஜன் சிங்” சுப்மண் கில்லின் அணுகு முறையில் தவறு எதுவும் இல்லை. இது போன்ற ஆடுகளத்தில் வேறு எப்படி ஆட வேண்டும் என்று நினைக்கின்றீர்கள். நீங்கள் சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஆடி பின்னர் எதிரணியின் பந்துவீச்சாளர்கள் தவறு செய்வார்கள் என்று காத்திருந்தாள் அது இந்த ஆடுகளத்தில் நடக்காது. இங்கு நீங்கள் ரண்களை குவிக்க வேண்டும் ஆனால் ரிஸ்க் எடுத்தே ஆக வேண்டும் அதைத்தான் கில்லும் செய்ய நினைத்தார் எனக் கூறினார்.

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய ஹர்பஜன் சிங் நீங்கள் 70 அல்லது 80 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தாலும் ஏதேனும் ஒரு பந்து உங்களது விக்கெட்டை வீழ்த்தி விடும். அதனால் இதே மாதிரியான ஆடுகளங்களில் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பினையும் பயன்படுத்தி எவ்வளவு அதிகமான ரன்களை சேர்க்க வேண்டும் என்ற திட்டத்துடன் தான் கில்லும் முயற்சி செய்தார். ஆனால் துரதிஷ்டவசமாக வர ஆட்டம் இழந்தார். இதில் விமர்சிப்பதற்கு ஒன்றும் இல்லை என கூறி முடித்தார் ஹர்பஜன்.

- Advertisement -