நாங்க செய்யாத தப்பே கிடையாது; எல்லாத்தையும் செஞ்சோம்; ஆனா நாங்க தப்பிச்சது இதனாலதான் – ஹர்திக் பாண்டியா ஓபன் ஸ்டேட்மென்ட்!

0
338
Hardikpandya

ஐபிஎல் தொடருக்கு கடந்த ஆண்டு புதிய அணியாக வந்து பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது மட்டுமில்லாமல், கோப்பையையும் வென்று அசத்தியது குஜராத் டைட்டன்ஸ்!

அதேபோல் இந்த முறையும் பிளே ஆப் சுற்றில் முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் உள்ளே நுழைந்து இருக்கிறது. கடந்த ஆண்டு போலவே கோப்பையை கைப்பற்றவும் அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

- Advertisement -

நேற்று அகமதாபாத் மைதானத்தில் ஹைதராபாத்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் திடீரென்று விஸ்வரூபம் எடுத்து சுப்மன் கில் சதம் அடிக்க குஜராத் 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இன்னொரு பக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பவர் பிளே அஸ்திரம் முகமது சமி வழக்கம் போல் தனது வித்தையைக் காட்டி, ஹைதராபாத்தின் மூன்று முக்கிய விக்கெட்டுகளை பவர் பிளேவில் கைப்பற்றி பிரமாதப்படுத்தினார்.

இன்னொரு பக்கத்தில் வந்த வேகப்பந்துவீச்சாளர் மொகித் சர்மாவும் நடு ஓவர்களில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அசத்தினார்.

- Advertisement -

இது மட்டும் இல்லாமல் குஜராத் அணியின் ஆப்கானிஸ்தான் சுழல் கூட்டணி அமைத்திருக்கும் ரஷித் கான் மற்றும் நூர் அகமது இருவரும் அமர்க்களப்படுத்தி வருகிறார்கள்.

இப்படியான வீரர்கள் ஒவ்வொரு ஆட்டத்தில் யாராவது ஒருவர் வந்து குஜராத் அணிக்கு நெருக்கடியான நேரத்தில் மிகச் சிறப்பாக விளையாடி அசத்தி விடுகிறார்கள்.

தனது அணி குறித்து பேசி உள்ள ஹர்திக் பாண்டியா ” இரண்டு முறை தொடர்ந்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறோம். எங்கள் அணியின் வீரர்கள் ஒவ்வொரு நெருக்கடியான சவாலான நேரத்திலும் கைகளை உயர்த்தினார்கள். நாங்கள் இதற்கு மிகவும் தகுதியானவர்கள்.

எங்களைப் பற்றிய எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனால் குழுவில் கவனம் செலுத்துவது முக்கியம். நாங்கள் நிறைய தவறுகளைச் செய்தோம். ஆனால் விளையாட்டில் இருந்தோம். சீராக இருக்க முயற்சி செய்தோம். அதனால் தப்பித்தோம்

பந்துவீச்சாளர்கள் என் இதயத்திற்கு எப்பொழுதும் நெருக்கமானவர்கள். சில சமயங்களில் பேட்டர்கள் அதிக மதிப்பைப் பெறுவார்கள். நான் எப்பொழுதும் பவுலர்களின் கேப்டனாக இருக்க விரும்புகிறேன். மேலும் அவர்களுக்கான கிரெடிட்டை அவர்கள் பெறுவதை உறுதி செய்வேன்!” என்று கூறி இருக்கிறார்!