“வாடகையே இல்லாம உங்க மூளைக்குள்ள இருந்து இதயத்துடிப்ப நிறுத்திட்டார்” – இந்திய முன்னாள் வீரர் ஷாகின் அப்ரிடிக்கு பெரிய பாராட்டு!

0
646
Shaheen

இந்திய ரசிகர்கள் பயந்து எதிர்பார்த்தபடியே நேற்று இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி மிரட்டி இருக்கிறார்!

நேற்று புதிய பந்தில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை அவர் வெளியேற்றி மிக நல்ல துவக்கத்தை அணிக்கு ஏற்படுத்தி தந்தார். இதற்கு அடுத்து மீண்டும் கடைசி ஸ்பெல்லுக்கு வந்து ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவர் விக்கெட்டையும் வீழ்த்தி, இந்திய அணி பெரிய ஸ்கோருக்கு செல்வதை தடுத்து நிறுத்தினார்.

- Advertisement -

நேற்று மொத்தம் 10 ஓவர்கள் பந்து வீசிய அவர் இரண்டு மெய்டன்கள் செய்து 35 ரன்கள் மட்டுமே விட்டுத் தந்து நான்கு விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இது அவரது நான்காவது சிறந்த பந்துவீச்சாக ஒருநாள் கிரிக்கெட்டில் அமைந்தது.

நேற்று அவர் செயல்பட்ட விதத்திற்கு அவருக்குத்தான் ஆட்டநாயகன் விருது தரப்பட வேண்டும் என்று இந்திய தரப்பிலிருந்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறி இருக்கிறார். இஷான் கிஷான் மற்றும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டு இருந்தாலுமே இவரே ஆட்டநாயகன் விருதுக்கு தகுதியானவர் என்று கூறி இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும் பொழுது
” ஆட்டம் முழுவதுமாக நடந்து முடியாவிட்டாலும் கூட ஆட்டநாயகன் விருது யாருக்கு என்று பேச வேண்டும். இதற்கு நிறைய போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இஷான் கிஷான் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் 80க்கும் மேற்பட்ட ரண்களை எடுத்தார்கள். இது இந்தியாவை நல்ல நிலைக்கு கொண்டு சென்றது. அவர்கள் சண்டை செய்தார்கள் ஆனாலும் கூட என்னுடைய ஆட்டநாயகன் ஷாகின் ஷா அப்ரிடிதான்.

- Advertisement -

அவர் பந்துவீச்சை முதலில் ஆரம்பிக்கிறார். நல்ல தரமான வேகமான சுவிங் பந்துவீச்சை கொண்டிருக்கிறார். இப்படியான நேரத்தில் அவர் இந்திய வீரர்களின் மூளைக்குள் வாடகை இல்லாமல் தங்கி இருப்பதாக தெரிகிறது. அவர் பந்தை வீச ஓடிவரும் பொழுது பேட்ஸ்மேன்கள் என்ன நினைக்கிறார்களோ, ஆனால் நாம் அவர் விக்கெட் வீழ்த்தப் போகிறார் என்றுதான் நினைக்கிறோம்.

இது மிகவும் மெதுவான ஆரம்பம். சுப்மல் கில் தனது ரன் கணக்கை துவங்காத போது, ஆனால் ஷாஹின் ரோகித் சர்மாவையும் விராட் கோலியையும் புதிய பந்தில் வெளியேற்றினார். அதாவது இந்தியாவின் இதயத்துடிப்பை அவர் நிறுத்தினார்.

மேலும் இறுதியில் வந்து அவர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். மொத்தம் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். எனவே என்னுடைய ஆட்டநாயகன் ஷாகின் ஷா அப்ரிடிதான்!” என்று கூறி இருக்கிறார்!