“இனி அந்த லிஸ்டில் விராட் கோலிக்கு இடமில்லை” – இந்திய அணியின் முன்னாள் வீரர் நக்கல் பேச்சு!

0
229

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான அஷஸ் டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுடன் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரும் தொடங்க இருக்கிறது.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த நான்கு வீரர்கள் பற்றிய தனது கருத்தை தெரிவித்திருக்கிறார் இந்தியாவின் முன்னாள் துவக்க வீரர் ஆகாஷ் சோப்ரா. இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் உலகின் தலைசிறந்த நான்கு டெஸ்ட் வீரர்கள் என்ற பட்டியல் தற்போது மூன்றாக குறைந்து இருக்கிறது எனவும் தெரிவித்திருக்கிறார் .

- Advertisement -

2014 ஆம் முதல் 2019 ஆம் ஆண்டிற்கான காலகட்டத்தில் இந்திய அணியின் விராட் கோலி நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் ஆகியோர் தலைசிறந்த வீரர்களாக விளங்கினர் . ஒவ்வொரு காலகட்டத்திலும் தலைசிறந்த நான்கு வீரர்கள் அல்லது ஐந்து வீரர்கள் என உலகில் தலைசிறந்த வீரர்களை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

தற்போதைய காலகட்டத்தில் அந்த பட்டியலில் விராட் கோலி,கேன் வில்லியம்சன், 21 ஸ்மித் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் விளங்கி வந்தனர் . கோவிட் காலகட்டத்திற்கு பிறகு விராட் கோலியின் ஃபார்ம் மிகப்பெரிய சர்வை சந்தித்து இருக்கிறது. கடந்த மூன்று வருடங்களில் அவர் ஒரே ஒரு சதத்தை மட்டுமே பதிவு செய்திருக்கிறார். மேலும் அவரது சராசரியும் 26 இருக்கிறது . ஆனால் ஸ்டீவன் ஸ்மித் ஜோ ரூட் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் இந்தக் காலகட்டங்களில் மிக அதிகமான ரண்களை குவித்திருக்கின்றனர் . மேலும் இந்த மூவரும் 50 க்கு மேல் சராசரி வைத்திருக்கின்றனர் .

இது குறித்து தனது கருத்தை பதிவு செய்திருக்கும் ஆகாஷ் சோப்ரா ” பேப் 4-ல் விராட் கோலிக்கு இனிய இடமில்லை என தெரிவித்திருக்கிறார் . நான் இதில் முழுக்க டெஸ்ட் கிரிக்கெட்டை பற்றி மட்டுமே பேசுகிறேன். உலகின் தலைசிறந்த நான்கு வீரர்கள் என்ற நிலை தற்போது மாறிவிட்டது . இப்போதைக்கு உலகின் தலைசிறந்த மூன்று வீரர்கள் தான் அவர்கள் கேன் வில்லியம்சன், ஜோ ரூட் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் . விராட் கோலி முன்பு இந்த லிஸ்டில் இருந்தார் ஆனால் தற்போது அவர் அந்த இடத்திலிருந்து இறங்கி விட்டார்” என தெரிவித்து இருக்கிறார்,

- Advertisement -

மேலும் அந்த இடத்தில் விராட் கோலிக்கு பதிலாக பாபர் அசாமை சேர்க்கலாம் என்று பலரும் கூறி வருகிறார்கள் ஆனால் என்னை பொருத்தவரை பாபர் அசாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் அந்த நிலையை எட்டவில்லை என்றே நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார். இவையெல்லாம் நான் டெஸ்ட் கிரிக்கெட்டை பற்றி மட்டும்தான் பேசுகிறேன் இதில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளைப் பற்றி நான் பேசவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார் ஆகாஷ் சோப்ரா. கடந்த மூன்று வருடங்களில் ஜோ ரூட்,கேன் வில்லியம்சன் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரின் ரண்களை எடுத்துப் பாருங்கள் மற்றும் விராட் கோலியின் ரன்களையும் பாருங்கள். விராட் கோலி உலகின் தலைசிறந்த நான்கு டெஸ்ட் வீரர்களாக இருப்பதற்கான தகுதியை இழந்து விட்டார் . தற்போது உலகின் தலைசிறந்த மூன்று டெஸ்ட் வீரர்கள் தான் என தெரிவித்திருக்கிறார்