“உள்ள போய் பாத்தா யாரும் பெரிய ஆள் கிடையாது.. எல்லாரும் மனுசங்கதான்” – ஆப்கான் பயிற்சியாளர் அதிரடியான வெளிப்படையான பேச்சு!

0
542
Afghanistan

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரை ஆப்கானிஸ்தான அணி இங்கிலாந்து அணியை நேற்று டெல்லி மைதானத்தில் வென்று மிகவும் உற்சாகமான ஒன்றாக தற்பொழுது மாற்றி இருக்கிறது!

நேற்றைய போட்டியில் டாசை தோற்று முதலில் பேட்டிங் செய்து அதிரடியாக விளையாடி, 284 ரன்கள் எடுத்து ஆச்சரியப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணி, பந்துவீச்சில் திரும்பி இங்கிலாந்தின் பத்து விக்கெட் களையும் 215 ரன்களுக்கு வீழ்த்தி அட்டகாசப்படுத்தியது.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணிக்கு இது இரண்டாவது உலகக் கோப்பை வெற்றியாகும். இதற்கு முன்னால் 2015 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து அணியை உலகக் கோப்பை தொடரில் வீழ்த்தி இருந்தது.

அதே சமயத்தில் இதுவரை நடைபெற்றுள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய அதிர்ச்சி தோல்வியாக இது பலராலும் கூறப்படுகிறது. அப்படியான ஒரு மகத்தான வெற்றியை ஆப்கானிஸ்தான் அணி பெற்றிருக்கிறது.

முன்னாள் இங்கிலாந்து வீரரும் தற்போதைய ஆப்கானிஸ்தான் அணி பயிற்சியாளருமான ஜோனதன் டிராட் கூறும் பொழுது “எங்கள் வீரர்கள் விளையாடுவது கிரிக்கெட்காக மட்டும் கிடையாது. இயற்கை பேரழிவு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக சிலர் அனுபவிக்கும் கஷ்டங்கள் பற்றி எங்கள் வீரர்கள் புரிந்து இருக்கிறார்கள்.

- Advertisement -

ஆக இந்த வெற்றி மக்கள் முகத்தில் புன்னகையை கொண்டு வருவதோடு, ஆப்கானிஸ்தானில் அவர்கள் எங்கிருந்தாலும், கிரிக்கெட் பேட் மற்றும் பந்தை எடுத்துக் கொண்டு கிரிக்கெட் விளையாடுவதை ஊக்குவிக்கும் என்றால், இதுதான் நாங்கள் அடையப்பட்ட இலக்கு.

இந்த வெற்றி மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று. வித்தியாசத்திலும் கூட இது பெரியது. இதிலிருந்து கிடைக்கும் நம்பிக்கை மிகப்பெரியது. இது மற்ற ஆட்டங்களுக்கு ஒரு விளைவை ஏற்படுத்தும். ஆனால் இந்த உலகக் கோப்பை என்று இல்லாமல் ஆப்கானிஸ்தானில் எதிர்கால கிரிக்கெட்டுக்கும் இது முக்கியம்.

எங்களுடைய பலவீரர்கள் பிரான்சிஸைஸ் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர்களுக்கு எதிராகவும் ஒன்று சேர்ந்தும் விளையாடி இருக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு வீரர்களின் நுணுக்கங்களும் அவர்களுக்கு தெரியும்.

சில நேரங்களில் டெஸ்ட் விளையாடும் மிகப்பெரிய நாடுகளை நீங்கள் பார்க்கும் பொழுது, அவர்களை மிகப்பெரிய அளவில் மதிக்கிறீர்கள். அதே சமயத்தில் அவர்களுடன் நீங்கள் சேர்ந்து விளையாடும் பொழுது எல்லாம் இயல்பாகிறது. அவர்களும் மனிதர்கள் தான் என்பதையும் நீங்கள் அவர்களை வெல்ல முடியும் என்பதையும் உணர்ந்து கொள்கிறீர்கள்!” என்று கூறியிருக்கிறார்!