“இந்திய கிரிக்கெட்ல இந்த வீரரை எதிர்த்து கேள்வி கேட்க யாருமே கிடையாது!” – அம்பதி ராயுடு ஆச்சரியமான பேச்சு!

0
11244
Dhoni

இந்திய கிரிக்கெட்டில் அதிர்ஷ்டம் இல்லாத வீரர்களில் அம்பதி ராயிடுவும் ஒருவர். ஆனால் அவருடைய கிரிக்கெட் இறுதி காலங்கள் மிகவும் சிறப்பான ஒன்றாக இருந்தது.

அம்பதி ராயுடு கிரிக்கெட்டில் வளரும் காலகட்டங்களில் அவரை அடுத்த சச்சின் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். அவருடைய ஆட்டம் அவ்வளவு அபாரமான ஒன்றாக இருந்தது.

- Advertisement -

ஆனால் இயல்பிலேயே முன்கோபம் அதிகம் என்பதால் பயிற்சியாளர்கள் மற்றும் சக வீரர்களிடையே அவருக்கு பிரச்சனைகள் இருந்தது. இதனாலேயே அவரால் சரியான நேரத்திற்கு இந்திய அணிக்குள் வர முடியவில்லை.

பிறகு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்ற அவர், விரும்பத்தகாத வகையில் 2019 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது அவருடைய கிரிக்கெட் வாழ்வுக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது.

இதற்கு அடுத்து அவருக்கு சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை பெரிதாக இல்லை என்றாலும் கூட, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவருக்கு மிகச் சிறப்பான இடம் இருந்து வந்தது. அவருடைய பரிணாமத்தை மிகச் சரியாக வெளிப்படுத்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான்.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கோப்பை வென்ற காலங்களில் விளையாடி, பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்து மூன்று ஐபிஎல் கோப்பைகளை வென்று, தன்னுடைய கடைசி ஐபிஎல் ஓய்வில் ஐபிஎல் கோப்பையோடு ஓய்வு பெற்று, அம்பதி ராயுடு கிரிக்கெட் வாழ்வை சிறப்பாக முடித்துக் கொண்டார்.

இந்த நிலையில் மகேந்திர சிங் தோனி குறித்து அவர் பேசும்பொழுது “எல்லா கிரிக்கெட் வடிவங்களிலும் அவர் நிறைய வீரர்களிடம் இருந்த திறமையை வெளியே கொண்டு வந்திருக்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும். தோனி சிஎஸ்கே அணிக்கு விளையாடிய வெளிநாட்டு வீரர்களிடம் இருந்தும் சிறந்ததை வெளியே கொண்டு வந்துள்ளார்.

இந்தத் திறமை அவரிடம் இயல்பாகவே இருக்கிறது. இதை எப்படி நான் விளக்குவது என்று கூட எனக்கு தெரியவில்லை. தோனி ஆசீர்வதிக்கப்பட்ட ஒருவர். இல்லையென்றால் அவர் பல ஆண்டுகளாக விளையாடி இதை தெரிந்து கொண்டிருக்கிறார்.

அவர் சொல்வதுதான் சரியாக இருக்கும். ஒரு நாளின் முடிவில் அவர் என்ன சொன்னாரோ அதுதான் நடந்து முடிந்திருக்கும். இதைத்தான் 99.9% முடிவுகள் காட்டுகிறது.

இது அவர் என்ன செய்தார் என்பதையும், நாம் என்ன செய்யவில்லை என்பதையும் காட்டுகிறது. அவர் முடிவுகள் எடுப்பதில் எப்பொழுதும் வெற்றிகரமாக இருந்துள்ளதால், இந்திய கிரிக்கெட்டில் அவர் முடிவுகள் குறித்து கேள்விகள் கேட்க யாருமே கிடையாது என்று நினைக்கிறேன்!” என்று கூறியுள்ளார்!