“கோலி வார்னர் கிடையாது.. இந்த 36 வயது வீரர்தான் தொடர் நாயகன் விருது வாங்குவார்” – ஷேன் வாட்சன் வெளியிட்ட ஆச்சரிய கணிப்பு!

0
2547
Virat

தற்போது இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் சூடுபிடிக்க ஆரம்பித்து சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரத்தின் இறுதியில் எந்த அணிகள் அரைஇறுதிக்கு வரும் என்று தெரிந்துவிடும்.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் எதிர்பார்க்கப்பட்ட கில், பாபர் அசாம், ஜோ ரூட், ஸ்மித், பட்லர் ஆகிய பேட்ஸ்மேன்கள் இதுவரை பெரிதாக எதையும் செய்யவில்லை. கேன் வில்லியம்சன் காயம் காரணமாக ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கிறார்.

- Advertisement -

அதே சமயத்தில் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் மற்றும் இந்தியாவின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மிகச் சிறப்பான பேட்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இன்னொரு பக்கத்தில் இந்தப் பட்டியலில் இல்லாத நியூசிலாந்தின் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திர ஆகியோரும் சிறப்பாக வந்திருக்கிறார்கள். மேலும் இதே போல் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் சிறப்பான பேட்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்.

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இவர்களிலிருந்து யாராவது ஒருவர் தொடர் நாயகன் விருதை வெல்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது. இன்னும் தொடர் பாதி இருக்கின்ற காரணத்தினால் இவர்கள் முன்னோக்கி செல்லும் பொழுது, பெரிய அளவில் ரன்கள் குவித்து இருப்பார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இவர்களில் இருந்து யார் நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகனாக வருவார்கள் என்கின்ற தன்னுடைய கணிப்பை, ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் முன் வைத்திருக்கிறார்.

இதுகுறித்து ஷேன் வாட்சன் கூறும் பொழுது ” என்னைப் பொறுத்தவரை நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் நாயகனாக ரோகித் சர்மா இருப்பதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். அவர் ஆட்டத்தின் முதல் பந்திலேயே உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மிகச் சிறப்பாக ஆரம்பிக்கிறார். அவர் இந்த உலகக் கோப்பை தொடரை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார். மேலும் இதையே அவர் இறுதி வரை தொடர்வார் என்று நான் நம்புகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!