“கோலி ஜடேஜா கிடையாது.. இந்த 2 பேர்தான் டீம்ல இப்ப ரொம்ப முக்கியம்” – கேப்டன் ரோகித் சர்மா பேச்சு

0
181
Rohit

இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் நாளை 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் மோதுகிறது.

இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முதல் இரண்டு போட்டிகளுக்கு மட்டும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் இடம் பெற்று இருந்த விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக அணிய விட்டு விலகி இருக்கிறார். கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கு அவர் திரும்பவார்.

- Advertisement -

இந்த நிலையில் விராட் கோலி இடத்தில் பிளேயிங் லெவனில் கேஎல்.ராகுலுக்கு வாய்ப்பு கிடைத்துவிடும். மேலும் அச்சர் படேலா இல்லை குல்தீப் யாதவா? என்பதில் மட்டுமே கேப்டன் மற்றும் பயிற்சியாளருக்கு ஒரு தலைவலி இருக்கிறது.

மேலும் இந்திய அணி இந்தியாவில் வைத்து கடைசியாக டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணியிடம் 2012 ஆம் ஆண்டு இழந்திருந்தது. அதன் பிறகு உள்நாட்டில் எந்த டெஸ்ட் தொடரையும் இந்திய அணி தோற்கவில்லை.

இந்த நிலையில் இது குறித்து கேப்டன் ரோகித் சர்மா பேசிய பொழுது “நாங்கள் தோற்க மாட்டோம் என்பது கிடையாது. நாளின் முடிவில் இது ஒரு விளையாட்டு. இங்கு யாரும் தோற்பதற்கு வாய்ப்புகள் உண்டு. நாங்கள் வைத்திருக்கும் கடந்த கால சாதனைகள் எதுவாக இருந்தாலும், அது வெற்றிக்கு உத்திரவாதம் அளிக்காது. நாங்கள் தொடரில் முதலிடம் பிடித்த சிறந்த கிரிக்கெட் விளையாட வேண்டும்.

- Advertisement -

குல்தீப் யாதவ் ஆடுகளத்தில் சாதகம் இல்லை என்றால் கூட, அவரால் ஒரு எக்ஸ் ஃபாக்டராக இருக்க முடியும். அவர் வேரியேஷன் வைத்திருக்கிறார். அதே சமயத்தில் அக்சர் படேல் பேட்டிங்கில் நீளத்தை கொடுக்கிறார். இந்த இருவரில் யார் என்பதுதான் இப்பொழுது ஒரு நல்ல தலைவலியாக அமைந்திருக்கிறது.

இதையும் படிங்க : IND-AvsENG-L.. 32 ஓவரில் அதிரடி.. சுருண்டது இங்கிலாந்து லயன்ஸ்.. படிக்கல் அதிரடியில் இந்தியா ஏ வலுவான முன்னணி

அஸ்வினும் சிராஜும் எங்களுக்கு மிக முக்கியமான வீரர்கள். கடந்த இரண்டு வருடங்களில் தரவரிசையில் நல்ல முறையில் முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள். அஸ்வின் தரமான வீரர். எங்களுக்காக பல சூழ்நிலைகளில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அவர் தனது ஆட்டத்தை வேறு ஒரு லெவலுக்கு கொண்டு சென்றிருக்கிறார். அவர் களத்தில் இறங்கும் ஒவ்வொரு முறையும் எல்லோரையும் கவர முயற்சி செய்கிறார்” என்று கூறியிருக்கிறார்.