“கிளாசன் கிடையாது.. உலகத்திலேயே இந்த இந்திய பேட்ஸ்மேன்தான் ஆபத்தான வீரர்!” – சோயப் மாலிக் மனம் திறந்த பாராட்டு!

0
16464
Malik

நேற்றுடன் நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்று முடிவுக்கு வந்திருக்கிறது. லீக் சுற்றின் முடிவில் இந்திய அணி தோல்வி அடையாத அணியாக அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறது.

நேற்று பெங்களூரில் நெதர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் 9 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி பயிற்சியும் செய்து கொண்டது.

- Advertisement -

இந்திய அணியின் டாப் ஆர்டர்கள் ரோகித் சர்மா, சுப்மன் கில் மற்றும் விராட் கோலி மூவரும் அரை சதம் அடித்து ஆட்டம் இழந்தார்கள். இந்த நிலையில் களத்தில் நிலைத்து நின்று விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்தார்.

ஆனால் 30 ஓவர்கள் கழித்து பேட்டிங்கில் ஐந்தாம் இடத்தில் விளையாட வந்த கே எல் ராகுல் அபாரமாக விளையாடி 63 பந்துகளில் சதம் அடித்து, உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு அதிவேக சதம் அடித்த வீரர் என்கின்ற சாதனையை நேற்று படைத்தார்.

- Advertisement -

கே.எல்.ராகுல் மேல் வரிசையில் இருப்பதைவிட கீழ் வரிசையில் மிக ஆபத்தான பேட்ஸ்மேனாக எப்பொழுதும் இருந்து வந்திருக்கிறார். இது மட்டும் இல்லாமல் அணியில் எந்த இடத்தில் விளையாட சொன்னாலும் அவரால் விளையாட முடிவதுதான் சிறப்பு. இத்தோடு அவர் விக்கெட் கீப்பிங் பிரதான விக்கெட் கீப்பர் போல மிகச் சிறப்பாக செய்கிறார்.

இதுகுறித்து சோயப் மாலிக் கூறும்பொழுது “உலகக் கிரிக்கெட்டில் ஐந்தாவது இடத்தில் சிறந்தவர் கிளாசன். ஆனால் அவர் முன்னேறி செல்வதற்கு யாராவது ஒரு அடிப்படையை உருவாக்கி இருக்க வேண்டும். ஆனால் இவரோடு இந்தியாவை வைத்து பார்க்கும் பொழுது இந்தியாவில்தான் ஐந்தாம் இடத்தில் விளையாடும் சிறப்பான கேஎல் ராகுல் இருக்கிறார்.

இந்தியா இரண்டு மூன்று விக்கெட்டுகளை முன்கூட்டியே இழந்தால், அவரால் சூழ்நிலைக்கு ஏற்ப ஆட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். தேவைப்படும் பொழுது அவரால் அதிரடியாகவும் விளையாட முடியும்.

அவரால் இன்னிங்ஸை உருவாக்கவும், மேம்படுத்தவும், மேலும் ஆட்டத்தை முடிக்கவும் எல்லாமே முடியும். அவர் சுழற் பந்து மற்றும் வேகப்பந்து வீச்சு என இரண்டிலுமே சிறந்தவர். அவர் களத்தில் கேப் பார்த்து அருமையாக விளையாடக் கூடியவர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதை பார்த்தோம். அவர் ஆரம்பித்து விளையாடி கடைசியாக ஆட்டத்தையும் முடித்தார்!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -