“கோலி கிடையாது.. இந்தியாவின் டான் பிராட்மேன் இவர்தான்.. இங்கிலாந்துக்கு தலைவலி” – பனேசர் பேச்சு!

0
398
Virat

2022 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இந்தியாவில் மோதிக்கொள்ள இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மிகப்பெரிய டெஸ்ட் கிரிக்கெட் தொடராக பார்க்கப்படுகிறது.

இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரை வெல்லும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை மிக அதிகமாக பிரகாசப்படுத்தி கொள்ளும். அதே வேளையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்புகள் இருப்பதற்கு இங்கிலாந்து இந்த டெஸ்ட் தொடரை வென்றாக வேண்டும்.

- Advertisement -

மேலும் இங்கிலாந்து மெக்கலம் பயிற்சியில் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டை ஒருநாள் கிரிக்கெட் போல மிக அதிரடியாக அணுகி வருகிறது. உலகம் முழுவதிலும் இருந்து கணிசமான ரசிகர்களை இதன் மூலம் உருவாக்கி இருக்கிறது.

இப்படியான நிலையில் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் இங்கிலாந்தின் தற்போதைய அதிரடி பேட்டிங் அணுகுமுறை எப்படி பலனளிக்கும்? என்று பார்க்க உலகம் முழுவதிலும் இருந்து டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இதன் காரணமாக இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு உலகம் முழுவதிலும் இருந்து பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. எனவே இந்த தொடரை சுற்றி நிறைய கருத்துக்கள் நிறைய முன்னாள் வீரர்கள் இடமிருந்து வந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

இந்த தொடர் குறித்து பேசி உள்ள இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் கூறும் பொழுது “இந்திய பேட்டர்கள் சுழற் பந்துவீச்சுக்கு எதிராக தாக்குதல் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். ரோகித் சர்மா இந்திய அணிக்கு முக்கியமான பேட்ஸ்மேன் ஆக இருக்கப் போகிறார். ரோகித் சர்மா சுழற் பந்துவீச்சுக்கு எதிராக டான் பிராட்மேன் ஆவார். இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள, ரோகித் சர்மாவை எடுத்ததும் வெளியேற்ற வேண்டும்.

இங்கிலாந்து அணியால் ரோஹித் சர்மாவை பேட்டிங்கில் அமைதியாக வைத்திருக்க முடிந்தால், இந்தியா பிளான் பி-க்கு போகும். இது இங்கிலாந்துக்கு நல்லது. இதன் மூலம் இங்கிலாந்து இளம் இந்திய பேட்ஸ்மேன்களின் மீது அழுத்தத்தை உண்டாக்க முடியும்!” என்று கூறியிருக்கிறார்!