கில் கிடையாது.. இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் இந்தப் பையன்தான் – 2007 டி20 உலக கோப்பை வென்ற இந்திய முன்னாள் வீரர்!

0
1188
Gill

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் விளையாடி வருகிறது.

இந்தத் தொடரில் முதல் டி20 போட்டியில் இந்திய அணி பரபரப்பான ஆட்டத்தில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வியை தழுவியது.

- Advertisement -

இந்தப் போட்டியில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக உள்நாட்டு கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணிக்காகவும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடும் திலக் வர்மா அறிமுகமானார்.

இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறிக் கொண்டிருந்த முதல் போட்டியில் ஆடுகளத்தில் தான் சந்தித்த இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்துகளில் சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார். 22 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 39 ரன்கள் எடுத்தார்.

இவரைப் பற்றி பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஆர்பி.சிங் “இது ஒரு நல்ல ஆட்டம். நல்ல எதிர்காலம் அவருக்குள் மறைந்து இருப்பதாக நான் உணர்கிறேன். நாம் அனைவரும் இடது கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை தேடுகிறோம். திலக் வர்மாவை நாம் அப்படித்தான் பார்க்க வேண்டும்.

- Advertisement -

அவர் ஒரு சிக்ஸர் உடன் தனது ரன் கணக்கை தொடங்கினார். மீண்டும் ஒரு சிக்ஸர் அடித்தார். மூன்றாவதாக எக்ஸ்ட்ரா கவர் திசையில் ஒரு சிக்ஸர் அடித்தார். இந்த இடத்தில் சிக்ஸர் அடிப்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் கிடையாது!” என்று கூறியிருக்கிறார்!

இவரைத் தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் அபிஷேக் நாயர் கூறும் பொழுது ” அவரது பேட்டிங்கில் நிறைய உறுதிப்பாடு காணப்பட்டது.இது அவரது அடையாளமாக காணப்படும் விஷயம். இது இப்போது இல்லை ஆரம்பத்தில் இருந்தே இப்படித்தான். அன்று அவர் ஆடிய முதல் ஷாட் மிக நன்றாக இருந்தது. ஆனால் அது கடினமான ஒன்று.

அவருக்கு நல்ல திறனும் திறமையும் இருக்கிறது. மேலும் அவர் சிறந்த நிலைத்தன்மை கொண்டிருக்கிறார். அதை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார். எல்லாவிதமான கண்டிஷன்களிலும் அவர் ரன்கள் எடுப்பார். எனவே அவர் இந்திய அணிக்கான எதிர்காலத்தில் சிறந்த வீரராக இருப்பார்!”என்று கூறியிருக்கிறார்!

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிக் கொள்ளும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் இன்று இந்திய நேரப்படி எட்டு மணிக்கு நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!