இந்தக் காரணத்தால் இந்த முறை ஐபிஎல் சாம்பியன் இந்த டீம்தான் ; பைனல் இந்த ரெண்டு டீம்தான் விளையாடும் – ரவி சாஸ்திரி கணிப்பு!

0
11742
Ravi shastri

நடப்பு ஐபிஎல் தொடர் பாதிக் கட்டத்தைத் தாண்டி மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது.

தற்பொழுது ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிகளும் தங்களது பிளே ஆப்ஸ் வாய்ப்பை இன்னும் விட்டுக் கொடுக்காமல் நிற்கின்றன.

- Advertisement -

இனி இந்த வருட ஐபிஎல் தொடரில் நடக்கும் ஒவ்வொரு போட்டிகளும் புள்ளி பட்டியலில் மிகப்பெரிய மாற்றங்களை உண்டாக்கும். ஒரு வெற்றி ஒரு அணியை ஆறாவது ஏழாவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு தூக்கிச் செல்லும் அளவுக்கு இருக்கிறது.

குஜராத் அணி 9 போட்டிகளில் விளையாடி மூன்றை மட்டும் தோற்று 12 புள்ளிகள் உடன் முதலிடத்தில் இருக்கிறது. பத்து போட்டிகளில் விளையாடி சென்னை மற்றும் லக்னோ 11 புள்ளிகள் உடன் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. ராஜஸ்தான், பெங்களூரு, மும்பை ஆகிய மூன்று அணிகளும் ஒன்பது போட்டிகளில் 10 புள்ளிகள் எடுத்து அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. பஞ்சாப் பத்து ஆட்டங்களில் 10 புள்ளிகள் எடுத்து அதற்கடுத்த இடத்தில் இருக்கிறது.

புள்ளி பட்டியல் இந்த அளவுக்கு நெருக்கமாக அமைந்துள்ளதால் நடக்கப் போகின்ற ஒவ்வொரு போட்டிகளும் மிகவும் முக்கியமானதாக இந்த ஐபிஎல் தொடரில் மாறி இருக்கிறது. எனவே இனிவரும் எல்லா போட்டிகளும் ரசிகர்களுக்கு விருந்து அளிப்பதுதான்!

- Advertisement -

இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரை எந்த அணி வெல்லும் என்று பேசி உள்ள ரவி சாஸ்திரி ” தற்போதைய பார்ம் மற்றும் அணி நிலைகளைப் பார்க்கும் பொழுது குஜராத் கோப்பையை வெல்லும் என்று நான் நினைக்கிறேன். இந்த அணியில் நிலைத்தன்மையும் நெகிழ்வுத் தன்மையும் இருக்கின்றது. மேலும் ஏழெட்டு வீரர்கள் தொடர்ந்து செயல்படுகிறார்கள். இந்த குஜராத் அணியில் உள்ள வீரர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை பூர்த்தி செய்கிறார்கள்.

அதே சமயத்தில் சஞ்சு சாம்சன் கேப்டனாக முதிர்ச்சி அடைந்து இருக்கிறார். அவர் தனது பந்துவீச்சாளர்களை மிக நன்றாகப் பயன்படுத்துகிறார். ஒரு நல்ல கேப்டன் மட்டுமே மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் விளையாடி அவர்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்தும். கடந்த முறை போலவே இந்த முறையும் அவர் தனது அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்லலாம்!” என்று கூறியிருக்கிறார்!