இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 17வது சீசன் ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. கொல்கத்தா அணிக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சின் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கும் சுனில் நரைன் போட்டிக்கு பிறகு பேசி இருக்கிறார்.
சுனில் நரேன் 15 போட்டிகளில் பேட்டிங்கில் மொத்தம் 488 ரன்கள் குவித்திருக்கிறார். மேலும் பந்துவீச்சில் 17 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். மேலும் பந்து வீசிய எல்லா போட்டிகளிலும் விக்கெட்டை பற்றி இருக்கிறார்.
கவுதம் கம்பீர் மென்டராக வந்து இவரை துவக்க வீரராக மேலே அனுப்பியது கொல்கத்தா அணி தற்பொழுது ஐபிஎல் சாம்பியனாக உருமாறி இருப்பதற்கு ஒரு மிக முக்கியக் காரணமாக இருக்கிறது. இவருடைய பேட்டிங் மற்றும் பவுலிங் பங்களிப்பு எந்த எதிரணிகளும் எதிர்பார்க்காத ஒன்று.
இறுதியாக இதே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2012 ஆம் ஆண்டு சுனில் நரேன் கொல்கத்தா அணிக்கு வந்த பொழுது அந்த அணி கோப்பையை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் 12 வருடங்கள் கழித்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா அணி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.
இதுகுறித்து சுனில் நரைன் பேசும்பொழுது “இன்று மைதானத்திற்கு வந்ததும் 2012 ஆம் ஆண்டு நினைவுகள் வந்தது மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. நான் என்னுடைய பேட்டிங், பவுலிங், பீல்டிங் ஒரு வீரராக அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வது என எனது கிரிக்கெட்டை ரசித்து விளையாடுகிறேன். பேட்டிங்கில் என்னுடைய ரோலை பெறுவதில் கம்பீர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். மேலும் என்னுடன் சால்ட் மிகவும் சிறப்பாக விளையாடினார். அந்த இடத்தை குர்பாஸ் வந்து நிரப்பினார்.
இதையும் படிங்க : கொல்கத்தா புதிய சாதனையுடன் 3வது முறை ஐபிஎல் சாம்பியன்.. 12 வருடம் கழித்து சேப்பாக்கத்தில் சம்பவம்
எப்பொழுதும் உங்களுக்கு துவக்க இடத்தில் நல்ல இன்டெண்ட் கொண்ட ஒரு கூட்டாளி இருப்பது நல்லது. நாங்கள் எப்பொழுதும் பந்து வீச வரும்பொழுது குறைந்த அழுத்தத்துடன் பந்து வீசுகிறோம். மேலும் ஆரம்ப விக்கெட்டுகளை பெறுகிறோம். ஒரு பவுலிங் யூனிட் ஆக விக்கெட்டுகளை எடுப்பது முக்கியம். இதுதான் நாங்கள் பட்டத்தை வெல்ல முக்கிய காரணம்” என்று கூறி இருக்கிறார்.