டி20 உலக கோப்பை.. பாகிஸ்தானுக்கு எதிராக ஜெய்ஸ்வால் ஆட முக்கிய 2 காரணங்கள்.. கோலி வேண்டாம்

0
712
Jaiswal

ஐசிசி நடத்தும் பத்தாவது டி20 உலகக் கோப்பை தொடர், இன்னும் சில நாட்களில் ஜூன் இரண்டாம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் நாடுகளில் துவங்குகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரராக ஜெய்ஸ்வால் களமிறங்க வேண்டியதன் மிக முக்கியமான இரண்டு காரணங்கள் பற்றி இந்தச் சிறிய கட்டுரை தொகுப்பில் பார்க்கலாம்.

நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் மூன்றாவது மாற்று தொடக்கஆட்டக்காரர் அறிவிக்கப்படவில்லை. ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா என இருவர் மட்டுமே துவக்க ஆட்டக்காரர்களாக இருக்கிறார்கள்.

- Advertisement -

விராட் கோலி துவக்க இடத்தில் விளையாட முடியும் என்கின்ற காரணத்தினால், 15 பேர் கொண்ட அணியில் மாற்று துவக்க ஆட்டக்காரருக்கு இடம் கொடுக்கப்படவில்லை. இதன் காரணமாக வேறு துறைகளில் வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கு வசதியாக அமைந்தது.

இந்த நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க வேண்டும் என ரிக்கி பாண்டிங் வரையில் வலியுறுத்தி பேசி வருகிறார்கள். ஆனால் வலது கை வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கும் பொழுது இந்திய அணிக்கு அது கொஞ்சம் பாதிப்புகளை உருவாக்கும் விதமாக இருக்கிறது.

டி20 உலகக் கோப்பை நடக்க இருக்கும் இரண்டுநாடுகளின் ஆடுகளங்களும் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமானவை. எனவே பவர் பிளேவிலேயே சுழல் பந்துவீச்சாளரை கொண்டு வர வாய்ப்புகள் மிக அதிகம். குறிப்பாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி துவக்க ஆட்டக்காரர்களாக வரும் பொழுது, இடது கை சுழல் பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்திலேயே வந்து விடுவார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : டெஸ்ட் சீரிஸ்.. ஆஸியின் பக்கா ஸ்கெட்ச்.. பதிலடியாக இந்தியா மாஸ்டர் பிளான்.. புதிய போட்டிகள்

இதைத் தடுப்பதற்கும் இல்லை அடிப்பதற்கும் இடது கை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் கட்டாயம் தேவை. பாகிஸ்தான் அணிக்கு பொருத்தவரையில் எடுத்துக் கொண்டால் இடது கை சுழல் பந்துவீச்சாளர் இமாத் வாஸிம் திரும்ப வந்திருக்கிறார். இவர் பவர் பிளேவில் சிறப்பாக வீசக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இடது கை வேகப்பந்துவீச்சாளர்கள் ஷாகின் அப்ரிடி மற்றும் முகமது ஆமீர் என இருவர் இருக்கிறார்கள் இவர்களுக்கு எதிராகவும் இடதுகை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் அவசியம். இடதுகை வலதுகை பேட்டிங் காம்பினேஷன்தான் எதிரணி பவுலர்களை செட்டில் ஆக விடாது. எனவே ஜெய்ஸ்வால் துவக்க வீரராக விளையாட வேண்டியது முக்கியம்!