நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் எப்போது இணைவார்? என்ற செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஆனால் வெளியாகி உள்ள செய்திகள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கவலையிலும் சோகத்திலும் ஆழ்த்தி இருக்கிறது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டருக்கு பாஸ்கர் டெஸ்ட் தொடரின் ஐந்தாவது போட்டியில் பும்ரா காயம் அடைந்தார். அதற்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் இடம் பெற்றாலும் கூட, கலந்து கொண்டு விளையாட முடியவில்லை. இதனால் ஹர்ஷித் ராணா இடம்பெற்று விளையாடினார். தற்போது அவர் என்சிஏ-வில் மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் இருந்து வருகிறார்.
நியூசிலாந்தின் லெஜெண்ட் ஏகப்பந்துவீச்சாளர் ஷேன் பாண்ட் பும்ரா குறித்து பேசி இருக்கும் பொழுது அவருக்கு இன்னொரு முறை ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்த இடத்தில் மீண்டும் அறுவை சிகிச்சை நடந்தால் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும் என்ற அதிர்ச்சியான தகவலை கூறி இருந்தார். ஒரே பகுதியில் மீண்டும் மீண்டும் அறுவை சிகிச்சை செய்வது வேகப் பந்துவீச்சாளருக்கு பெரிய ஆபத்து என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக பும்ராவுக்கு அடுத்த அறுவை சிகிச்சை செய்ய பிசிசிஐ மருத்துவக் குழு தயாராக இல்லை. அவருக்கு அழுத்தத்தால் ஏற்பட்டிருக்கும் உள் காயத்திற்கு காலம்தான் சிறந்த மருந்து. எனவே எவ்வளவு காலம் ஓய்வு எடுக்க முடிகிறதோ அவ்வளவு காலம் ஓய்வெடுப்பது சிறந்தது என்பதால் அவர் சிறிய சிறிய பந்துவீச்சு பயிற்சிகளில் மட்டுமே ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் அவருக்கு ஏற்பட்டிருக்கும் அழுத்த எலும்பு முறிவு காயம் மேலும் அதிகமாகிவிடக் கூடாது என்பதால், உடனடியாக பிசிசிஐ மருத்துவக் குழு அவரை ஐபிஎல் தொடருக்கு அனுப்ப விரும்பவில்லை என்று செய்திகள் தெரிவிக்கிறது. இதன் காரணமாக அவரை இந்த மாதம் ஏப்ரல் மத்தியில் ஐபிஎல் தொடருக்கு அனுப்ப முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ரிக்கி பாண்டிங் இதைப் பற்றி வீரர்களிடம் பேசவே மாட்டார்.. இந்த மாதிரி நாங்க யாரையுமே பாக்கல – பஞ்சாப் வீரர்கள் புகழாரம்
அதே சமயத்தில் அந்த நேரத்திலும் மருத்துவக் குழுவுக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே அனுப்புவார்கள் என்றும், இங்கிலாந்து தொடரே இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு மிகவும் முக்கியமாக இருக்கிறது எனவும், இந்த காரணத்தினால் பும்ரா ஐபிஎல் தொடரில் விளையாடாமல் கூட போகலாம் எனவும் செய்திகள் கூறுகிறது. இந்திய ரசிகர்கள் அவர் ஐபிஎல் தொடரில் விளையாட விட்டாலும் மீண்டும் இந்திய அணிக்கு வந்தால் போதும் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்!