உலக கிரிக்கெட்

ஜிம்பாப்வே தொடர்.. பாகிஸ்தான் கிரிக்கெட் எடுத்த வித்தியாசமான முடிவு.. பாபர் அசாம் ஷாஹீன் அப்ரிடி மீண்டும் பின்னடைவு

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி பெற்றிருக்கும் வெற்றி அந்த அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது.

- Advertisement -

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெளியேற்றப்பட்ட மூன்று முன்னணி வீரர்களுக்கு பதிலாக இடம் பிடித்த வீரர்கள் தங்களது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும் நிலையில் அடுத்ததாக நடைபெற உள்ள ஜிம்பாப்வே தொடருக்கும் அவர்களை நீக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

பாகிஸ்தான் அணிக்கு கிடைத்த வெற்றி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில் சமீபத்தில் இங்கிலாந்து அணி பாகிஸ்தால் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வந்த நிலையில் முதல் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. எனவே இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணி தோல்வியை தவிர்க்க பாபர் அசாம் அப்ரிடி மற்றும் நஷீம்சா போன்ற முன்னணி வீரர்களையே வெளியேற்றியது.

இது பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்ற கருத்துக்கள் வெளிவந்த நிலையிலும் தைரியமான முடிவை மேற்கொண்ட பாகிஸ்தான் அணி இரண்டாவது போட்டியில் அவர்களுக்கு பதிலாக கம்ரான் குலாம், நோமன் அலி, சாஜித் கான் ஆகியோர் இடம் பெற்று இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து அணியை வீழ்த்த முக்கிய காரணமாக அமைந்தனர். மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலும் இவர்கள் மூவருமே விளையாடுவார்கள் என்று தெரிகிறது.

- Advertisement -

மூவர் இடம் பெறுவது சந்தேகம்

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ள நிலையில் வெள்ளை பந்து தொடருக்கு அந்த மூன்று முன்னணி வீரர்களை நீக்கி பாகிஸ்தான் பெரிய முடிவினை எடுக்காது என்று கூறப்படுகிறது. இருப்பினும் சாம்பியன்ஸ் ட்ராபிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாட இருப்பதால் அவர்கள் மூவரையும் திரும்பவும் அணிக்குள் சேர்க்குமா என்று உறுதியான தகவல் தெரியவில்லை.

இதையும் படிங்க:வெஸ்ட் இண்டீஸ் தொடர்.. இங்கிலாந்து அணி அறிவிப்பு.. திடீரென மாற்றப்பட்ட கேப்டன்.. சாம்பியன்ஸ் டிராபிக்கு குறி

இருப்பினும் இங்கிலாந்து தொடருக்கு அடுத்ததாக முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து பாகிஸ்தான் ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளதால் இளம் வீரர்களை வைத்து நிச்சயமாக சோதனை செய்யும். அப்படி இளம் வீரர்கள் தங்களை திறமையை நிரூபித்தால் அடுத்தடுத்து வரும் தொடர்களில் பாபர் அசாம், அப்ரிடி மற்றும் நஷீம்சா இடங்கள் கேள்விக்குறி தான் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த மூன்று வீரர்களும் மீண்டும் ஃபார்முக்கு வருவது அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. நவம்பர் 24ஆம் தேதி முதல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடர் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by