“இன்னும் 6 மேட்ச் இருக்குங்க.. நம்பிக்கை இருக்கு!” – தோல்விக்கு பின் இலங்கை புதிய கேப்டன் குசால் மெண்டிஸ் பேட்டி!

0
316
Mendis

இன்று தன்னுடைய முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த ஆஸ்திரேலியா அணியும் இலங்கை அணியும் லக்னோ மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மோதின.

இந்தப் போட்டியில் முதல் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இலங்கையணிக்கு சிறப்பாக இருந்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் 6 ரன் ரேட்டில் முதல் விக்கெட்டுக்கு 125 ரன் சேர்த்து கொடுத்தார்கள். இரண்டாவது விக்கெட் 157 ரன்களுக்கு விழுந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இலங்கை அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சேர்ந்து எடுத்த ரன்கள் வெறும் 52. மொத்தமாக இலங்கை அணி 209 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இதற்கு அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி ஐந்து விக்கெட்டுகள் மட்டும் இழந்து, 35.2 ஓவரில் இலங்கை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் சூழ்நிலையை உணர்ந்து பொறுமையாக விளையாடியிருந்தாலே நல்ல ரன்களை எட்டி ஆஸ்திரேலியா அணிக்கு பெரிய அழுத்தத்தை இரண்டாம் பகுதியில் கொடுத்திருக்க முடியும். ஆனால் யாரும் அதை செய்யவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் தோல்விக்கு பின் பேசிய இலங்கை அணியின் கேப்டன் குஷால் மெண்டிஸ் கூறும் பொழுது “எங்களின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் மிகச் சிறப்பான துவக்கத்தை கொடுத்தார்கள். அதன் பிறகு மிடில் ஆர்டர் சரியாக செயல்படவில்லை. நாங்கள் 300 ரன்கள் எடுத்திருந்தால் இந்த ஆடுகளத்திற்கு சரியாக இருந்திருக்கும். நாங்கள் தேவையான அளவுக்கு ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யவில்லை. மேலும் நிறைய டாட் பந்துகள் விளையாடி விட்டோம்.

நாங்கள் தோற்ற கடைசி இரண்டு ஆட்டங்களில் நன்றாகவே பேட்டிங் செய்தோம். ஆனால் இன்று நாங்கள் கொஞ்சம் சிரமப்பட்டோம். மேலும் நாங்கள் சிறப்பாக செயல்பட இன்னும் ஆறு போட்டிகள் இருக்கிறது. எனது பேட்டிங் யூனிட் மீது நம்பிக்கை இருக்கிறது. மதுசங்கா சிறப்பாக பந்து வீசினார். தசன் மற்றும் மதிஷா இருவரும் சீக்கிரம் குணமடைவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!